அஜித்தின் 60 வது படம் வலிமை தள்ளிப்போனதில் அனைவருக்குமே வருத்தம். படக்குழுவும், ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்த திரைப்படம் இது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இன்னும் சில மாதங்களுக்கு வலிமையை எதிர்பார்ப்பதற்கில்லை. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படம் திரைக்கு வரலாம்.
அதற்கு முன் திட்டமிட்டபடி அஜித்தின் அடுத்தப் படத்தை தொடங்கயிருக்கிறார்கள். ஏகே 61 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தையும் வினோத் இயக்குகிறார். தயாரிப்பது போனி கபூர். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி அடுத்தப் படத்திலும் இணைந்து ஹாட்ரிக் அடிக்கிறது.
இதற்கு முன் சிவா அஜித்தின் மூன்று படங்களை தொடர்ச்சியாக இயக்கினார். அஜித்தின் 61 வது படம் குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளன. வலிமையில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் திறமையும், ஒத்துழைப்பும் இயக்குனர், ஹீரோ இருவருக்குமே பிடித்துப் போனதால் அவரையே புதிய படத்துக்கும் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்ய உள்ளனர். அதேபோல் அஜித்தின் வேதாளம், விவேகம் படங்களுக்கு இசையமைத்த அனிருத்தை இந்த புதிய படத்துக்கும் இசையமைப்பாளராக்க முடிவு செய்துள்ளனர்.
முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் இந்தப் படம் உருவாக உள்ளது.விரைவில் படத்தில் பங்குபெறும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலுடன் படப்பிடிப்பு தேதியையும் அறிவிக்க உள்ளனர்.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.