அதிதி மேனனுடன் திருமணம் நடந்தது உண்மைதான் - ஆதாரத்தை வெளியிட்ட அபிசரவணன்

பட்டாதாரி, கேரள நாட்டிளம் பெண்களுடனே ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் அபி சரவணன். சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர், அட்டகத்தி படத்தில் துணை நடிகராக அறிமுகமானார்.

அதிதி மேனனுடன் திருமணம் நடந்தது உண்மைதான் - ஆதாரத்தை வெளியிட்ட அபிசரவணன்
நடிகர் அபி சரவணன் - அதிதி மேனன்
  • News18
  • Last Updated: February 20, 2019, 6:17 PM IST
  • Share this:
அதிதி மேனனுடன் தனக்கு திருமணம் நடந்தது உண்மைதான் என்று கூறிய நடிகர் அபி சரவணன் அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார்.

பட்டாதாரி, கேரள நாட்டிளம் பெண்களுடனே ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் அபி சரவணன். சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர், அட்டகத்தி படத்தில் துணை நடிகராக அறிமுகமானார். 2016-ம் ஆண்டு பட்டாதாரி படத்தில் அதிதி மேனனுடன் இணைந்து நடித்தார். இதையடுத்து இருவருக்கிடையே உருவான நட்பு காதலாகவும் மாறியது. பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அபி சரவணனை யாரோ கடத்தியதாக அவரது தந்தை ராஜேந்திர பாண்டியன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். நடிகை அதிதி மேனன் ஆட்களை வைத்து கடத்தியதாகவும் கூறப்பட்டது. இதன்பின்னர் காவல்நிலையத்தில் நேரில் ஆஜரான அபி சரவணன் தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறினார்.
இதையடுத்து கடந்த 18-ம் தேதி நடிகை அதிதி மேனன், அபி சரவணன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகார் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிதி மேனன், "பட்டாதாரி படத்தில் என்னுடன் இணைந்து நடித்தார் அபி சரவணன். நான் அவரைத் திருமணம் செய்துகொண்டு அவருடைய பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாகவும், ஏமாற்றிவிட்டதாகவும், என்னைப் பற்றி தவறான செய்திவந்தது. அடுத்ததாக இன்னொரு நபருடன் ஓடிவிட்டதாகவும், அவருடன் இணைந்து வாழ்ந்ததாகவும் தவறான செய்திகள் வெளிவந்துள்ளன.

பின்னர் நான் படங்களில் நடித்த பிறகு நான் உன்னைத் திருமணம் செய்துகொண்டுவிட்டேன் என்று சொல்லிப் பார்த்தார். நான் காவல்நிலையத்தில் புகார் அளித்த போது, போலி சான்றிதழை சமர்பித்தார். என்னுடைய இ-மெயில், ட்விட்டர் கணக்குகளில் ஊடுருவி தங்களுக்கு திருமணம் ஆனதாக அபிசரவணன் போலி ஆவணங்களை பதிவேற்றம் செய்தார். இது தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் அந்த ஆவணங்கள் போலியானவை என நிரூபித்த பின்னரே ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளேன். தொடர்ந்து எனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கிறார்” என்றும் கூறியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் அபி சரவணன் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், " அதிதி மேனனுக்கும் எனக்கும் சட்டப்படி திருமணமானது உண்மை. இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதால் நான் வெளியில் சொல்லவில்லை. ஆனால், 2016 -ம் ஆண்டிலிருந்து ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு திருமணமானதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர் சொன்ன மாதிரி நன்கொடைகளை எனது சுயலாபத்துக்கு பயன்படுத்தவில்லை. அதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது.

எங்களுக்குள் இந்த பிரச்சனை வருவதற்கு காரணமே சினிமா துறையை சேர்ந்த சுஜித் என்பவர் தான். மனம்மாறி என்னுடன் வாழ வந்தால் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன்." என்றார்.

முறையற்ற காதல்... 21 வயது இளைஞர், 40 வயது பெண் தற்கொலை - வீடியோ

First published: February 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading