சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்!

news18
Updated: July 19, 2019, 6:32 PM IST
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்!
சிவகார்த்திகேயன்
news18
Updated: July 19, 2019, 6:32 PM IST
சிவகார்த்திகேயன் படத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் இணைந்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. மேலும் படத்தில் வில்லனாக நடிகர் அர்ஜூனும், நடிகை இவானா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


கடந்த மார்ச் மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்நிலையில் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஹீரோ பட இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளருடன் சிவகார்த்திகேயன்




நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எஸ்.கே 16 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

வீடியோ பார்க்க: பாரதிராஜாவின் அரசியல்

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...