தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் இமேஜொடு வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். அவருக்கு தற்போது தோளுக்கு மேல் வளர்ந்த அழகான மகள் இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பி தான் ஆகணும்.
காதல் தேசம் படத்தில் அருணாக அறிமுகமாகி ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் அப்பாஸ். அதன்பிறகு விஐபி, பூச்சூடவா, பூவேலி, படையப்பா, ஹேராம், மின்னலே போன்ற பல ஹிட் படங்களில் நடித்தார். நிறைய படங்கள் நடித்துவந்த அவர் பட வாய்ப்புகள் குறையவே வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்த வரை ஃபேஷன் டிசைனர் எரும் அலி என்பவரை 1997-ல்
திருமணம் செய்துக் கொண்டார் அப்பாஸ். ஆயிரத்தில் ஒருவன், குரு என் ஆளு போன்ற படங்களிலும் டிசைனராக பணிபுரிந்திருக்கிறார் எரும் அலி.

எமிரா
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்பாஸ் - எரும் அலி தம்பதிக்கு ஐமான் என்ற மகனும், எமிரா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் 21 வயதாகும் எமிராவின் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன. இதைப் பார்த்த ரசிகர்கள், அப்பாஸூக்கு இவ்வளவு
பெரிய மகளா? ஹீரோயினாக நடிக்கலாமே என்ற ரீதியில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்