ஓவியாவை அடுத்து கவர்ச்சியில் சிக்கிய ஐஸ்வர்யா - அலேகா போஸ்டர் குறித்து ஆரி விளக்கம்

இந்தநிலையில் நடிகர் ஆரி - பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும்  ‘அலேகா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது.

ஓவியாவை அடுத்து கவர்ச்சியில் சிக்கிய ஐஸ்வர்யா - அலேகா போஸ்டர் குறித்து ஆரி விளக்கம்
அலேகா பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
  • News18
  • Last Updated: February 13, 2019, 5:47 PM IST
  • Share this:
கவர்ச்சியாக வெளியான தனது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து நடிகர் ஆரி விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90 எம்.எல் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில் இரட்டை அர்த்த வசனங்களும், கவர்ச்சி நிறைந்த காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இந்த ட்ரெய்லரைப் பார்த்த பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த மாதிரி படங்கள் தமிழ் சினிமாவின் சாபக்கேடு” என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் ஆரி - பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும்  ‘அலேகா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது. எஸ்.எஸ்.ராஜா மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கவர்ச்சி நிறைந்ததாக காணப்பட்டது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் நடிகர் ஆரி, “காமத்தை வியாபாரமாக்கும் படம் அல்ல, இது காதலின் உயர்வைச் சொல்லும் படம். காதலின் தெரிவு கலவியின் தொடக்கம். இது எங்கள் கதை அல்ல. உங்கள் காதல் கதை” என்று கூறியுள்ளார்.வடிவேலுவின் பேட்ட - வீடியோ

First published: February 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்