முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாலிவுட் நடிகர் அமீர் கானின் தாயாருக்கு ஹார்ட் அட்டாக்… உடல்நிலை குறித்து முக்கியத் தகவல்!

பாலிவுட் நடிகர் அமீர் கானின் தாயாருக்கு ஹார்ட் அட்டாக்… உடல்நிலை குறித்து முக்கியத் தகவல்!

தாயாருடன் ஆமிர் கான்

தாயாருடன் ஆமிர் கான்

அமீர் கானின் குடும்பத்தினர் ஜீனத்தை உடன் இருந்து கவனித்து வருகிறார்கள். கடைசியாக காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் ஆமிர் கான் பங்கேற்றிருந்தார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தி முன்னணி நடிகரான அமீர் கானின் தாயாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீபாவளியையொட்டி நடிகர் அமீர்கான் தனது குடும்பத்தினருடன் உற்சாகத்துடன் பண்டிகையை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் அவரது தாயார் ஜீனத்தும் பங்கேற்றிருக்கிறார். மும்பையில் உள்ள அமீர்கானின் பஞ்சாகனி இல்லத்தில் இந்த கொண்டாட்டங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில் தீபாவளியன்று ஜீனத்திற்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் உடனடியாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரிலேஷன்ஷிப்பில் அடுத்த கட்டத்திற்கு நகரும் சித்தார்த் – அதிதி ராவுடன் வெளிநாடு ட்ரிப்

அன்றைய தினம் ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். மருத்துவர்கள் தொடர்ந்து ஜீனத்தின் உடல் நிலையை கண்காணித்து வந்த நிலையில், தற்போது அவரது உடல் நிலை சற்று முன்னேற்றம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருவதாகவும், ஆனால் சில வாரங்களுக்கு தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

WATCH: காந்தாரா - வராக ரூபம் - பாடல் லிரிக் வீடியோ

சம்பவம் நடந்து சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுபற்றிய தகவல்கள் தற்போதுதான் வெளிவரத் தொடங்கியுள்ளன. அமீர் கானின் குடும்பத்தினர் ஜீனத்தை உடன் இருந்து கவனித்து வருகிறார்கள்.

கடைசியாக காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் அமீர் கான் பங்கேற்றிருந்தார். அவர் நடிப்பில் வெளிவந்த லால் சிங் சத்தா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பையும் அமீர் கான் வெளியிடாமல் இருக்கிறார்.

First published:

Tags: Aamir Khan