ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லால் சிங் சத்தா தோல்வியால் ஆமிர் கான் எடுத்த அதிரடி முடிவு… ரசிகர்கள் அதிர்ச்சி

லால் சிங் சத்தா தோல்வியால் ஆமிர் கான் எடுத்த அதிரடி முடிவு… ரசிகர்கள் அதிர்ச்சி

லால் சிங் சத்தா படத்தில் அமிர் கான்

லால் சிங் சத்தா படத்தில் அமிர் கான்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆகஸ்டில் வெளியான ஆமிர் கானின் லால் சிங் சத்தா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  லால் சிங் சத்தா படம் பெரும் தோல்வி அடைந்ததால் ஆமிர் கான் தற்போது அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுகளை குவித்த ஃபாரெஸ்ட் கம்ப் என்ற படத்தை அதிகாரப்பூர்வமாக லால் சிங் சத்தா என்ற பெயரில் நடிகர் ஆமிர் கான் ரீமேக் செய்திருந்தார். இந்த படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதற்கு முன்பாக ஆமிர் கான் நடிப்பில் வெளிவந்த தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் படம் படுதோல்வியை சந்தித்தது.

  இதனால் லால் சிங் சத்தா திரைப்படம் அவருக்கு திருப்பத்தை தரும் என்ற நம்பிக்கையில் ஆமிர்கானும் ரசிகர்களும் இருந்தனர். தமிழில் இந்த படத்தை உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது.

  இந்த நிலையில் எதிர்பார்ப்புக்கு மாறாக ஆமை வேக திரைக்கதையால், லால் சிங் சத்தா ரசிகர்களின் கவனத்தை பெற தவறியது. மிகப்பெரும் பொருட் செலவுடன் ஆண்டுக்கணக்கில் சிரமப்பட்டு எடுக்கப்பட்ட இந்தப் படம், தோல்வியை சந்தித்தது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

  Vijay TV Rithika: பாக்யலட்சுமி ரித்திகாவுக்கு டும் டும் டும்... மாப்பிள்ளை யார் தெரியுமா?

  லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு பின்னர் செய்தியாளர்களை ஆமிர்கான் சந்திக்காமல் இருந்தார். இந்நிலையில் நேற்று பேட்டி அளித்த அவர், சினிமாவில் நடிப்பதை விட்டு சில காலம் ஒதுங்கியிருக்கப் போவதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

  தனது 35 ஆண்டுகால நடிப்பு தொழிலில் ஆமிர் கான் எந்த ஓய்வும் எடுத்தது கிடையாது. சில காலம் ஓய்வு எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் நேரத்தை கழிக்க விரும்புவதாக ஆமிர் கான் தெரிவித்திருக்கிறார்.

  ‘மறைந்த தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்’ – தெலங்கானா அரசு அறிவிப்பு

  அவர் அளித்த பேட்டியில், ‘லால் சிங் சத்தா படத்திற்கு பின்னர் சாம்பியன்ஸ் என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தேன். இந்த படத்தின் திரைக்கதை அற்புதமாக இருக்கும். ஆனால் சில காலம் சினிமாவுக்கு ஓய்வு கொடுத்து விட்டு எனது குடும்பம், அம்மா மற்றும் குழந்தைகளுடன் இருக்க விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Aamir Khan