சின்னத்திரை நடிகர்களாக இருந்தாலும் சரி வெள்ளித்திரையில் பிரபலமான நடிகர்களாக இருந்தாலும், சரி தங்கள் துறையிலேயே யாரையேனும் காதலித்தால் அதை பற்றி வெளிப்படையாக தெரிவிக்க மாட்டார்கள். அந்த வரிசையில் வெள்ளித்திரையில் மற்றுமொரு நட்சத்திர ஜோடி ஒன்று பல காலமாக நாங்கள் காதலிக்கவில்லை என்று கூறி வந்தது.
ஆனால் தற்போது அவர்கள் இருவருக்கும் நிச்காயதார்த்தம் முடிந்துள்ளது என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
மிகக் குறைந்த அளவிலான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஸ்மார்ட்டான தோற்றம் மற்றும் நேர்த்தியான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஆதி. மிருகம் திரைப்படத்தில், மனிதர்களுக்கான அடிப்படை குணங்கள் கூட இல்லாத மிருகம் போன்ற பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் ஆதி. அடுத்தடுத்து ஈரம், மரகத நாணயம் என்று வெவ்வேறு வேடங்களில் அசத்தினார். அதே போல நிக்கி கல்ராணியும், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு பார்ட் 2 உள்ளிட்ட பல ஜாலியான படங்களில் நடித்துள்ளார்.
மரகத நாணயம் திரைப்படத்தில் ரசிகர்களை கொள்ளை கொண்ட ஆதி மற்றும் நிக்கி கல்ராணி தான் நிஜ வாழ்விலும் ஒன்றாக இணைகிறார்கள். திரைப்படத்தில் இந்த ஜோடி இணைய முடியவில்லையே என்ற வருத்தம் பலருக்கும் ஏற்பட்டது. ஒரே ஒரு முறை நாயகியின் குரலைக் கேட்கவில்லையே என்று ஏங்கும் ஆதியின் பாத்திரமும், நாயகி இறந்து விட, அவரின் உடலில் வேறு நபரின் ஆவி புகுந்து ரகளையான நிக்கி பாத்திரமும் பார்வையாளர்கள் மனதில் நச்சென்று பதிந்து விட்டது.
நல்ல நண்பர்களான ஆதி மற்றும் நிக்கி இருவருமே தங்களுக்குள் இருந்த உறவைப் பற்றி வெளிப்படையாக மறுக்கவும் இல்லை, ஆமாம் என்று ஒத்துக்கொள்ளவும் இல்லை. நீண்ட நாட்களாக, காதலிக்கிறீர்களா என்று கேள்விக்கு மௌனமே பதிலாக கூறி வந்தனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் உறவு மிகவும் தீவிரமாக இருப்பதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமாக திருமணச் செய்தி வெளியிடப்படும் என்றும் கிசுகிசுக்கள் வெளிவந்தன.
also read : காதல் குறித்து மனம் திறந்து பேசிய கண்மணி... கல்யாணத்துக்கு ரெடி
View this post on Instagram
அப்போது கூட இருவருமே காதலிக்கிறோம் என்றோ இல்லை என்றோ கூறவில்லை. பல இடங்களுக்கு இவர்கள் இருவரும் ஒன்றாக சென்ற புகைப்படங்களும் செய்திகளும் வெளியாகின. குறிப்பாக ஆதியின் அப்பா மற்றும் இயக்குநரான ரவி ராஜா பின்னி செட்டியின் பிறந்தநாள் விழாவிற்கு நிக்கி கல்ராணியின் வருகை பரபரப்பை ஏற்படுத்தியது. இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நெருங்கிய உறவு மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது என்ற செய்தி வெளியானது. நிக்கி கல்ராணியும் ஆதியும் காதலித்து வருவதால் தான் அவர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்ற செய்தி கண்ட கடந்த இரு நாட்களாக வைரலாக பரவி வருகிறது அதை உறுதிப்படுத்தும் விதமாக ஆதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் தங்களுடைய திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ந்துள்ளார்
also read : நடிகை காஜல் அகர்வாலின் கர்ப்பகால புகைப்படங்கள்...
வாழ்வின் மிகச்சிறந்த தருணம் என்பது ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது தான். நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்களைப் பற்றி தெரிந்து கொண்டோம். இப்பொழுது எங்கள் இருவரின் குடும்பத்தின் ஆசிர்வாதத்துடன் எங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறோம் என்று 24 மார்ச் அன்று நிச்சயதார்த்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் ஆதி.
இவர்களுக்கு திரைத்துறையில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிச்சயதார்த்த விழாவில் குடும்பங்கள் மற்றும் நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதேபோல திருமணமும் விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor aadhi, Actress, Nikki Galrani