கமலஹாசனை சந்தித்த நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்!
கமலஹாசனை சந்தித்த நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்!
கமலஹாசனுடன் நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்
Kamal Haasan | நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் சத்யஜோதி தியாகராஜன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, தனஞ்செயன் உள்ளிட்டவர்கள் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விக்ரம் திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் தயாரித்த நடித்த விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி அடைந்தது. தமிழகத்தில் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை நெருங்கி உள்ளது.
இந்த இந்த நிலையில் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் சத்யஜோதி தியாகராஜன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, தனஞ்செயன் உள்ளிட்டவர்கள் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அப்போது திரைத்துறையினர் சந்திக்கும் சிக்கல்கள் குறித்தும் கமலஹாசனுடன் அவர்கள் விவாதித்துள்ளனர். தமிழ் திரையுலகை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது குறித்த சில விஷயங்களையும் பேசியுள்ளனர்.
விக்ரம் திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா பகுதிகளிலும் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. கமல்ஹாசன் இதுவரை நடித்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் விக்ரம் பெற்றுள்ளது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.