ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உதயநிதியின் ஆக்ஷ்ன் அவதாரம்… எதிர்பார்ப்பை தூண்டும் ’கலகத் தலைவன்’ டீசர்

உதயநிதியின் ஆக்ஷ்ன் அவதாரம்… எதிர்பார்ப்பை தூண்டும் ’கலகத் தலைவன்’ டீசர்

கலக தலைவன் படத்தில் உதயநிதி ஸ்டாலின்

கலக தலைவன் படத்தில் உதயநிதி ஸ்டாலின்

டீசரை பார்க்கும்போது உதயநிதி படத்திலேயே அதிக ஆக்சன் கொண்டதாக கலக தலைவன் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உதயநிதியின் மாறுபட்ட தோட்டத்தில் கலகத் தலைவன் படத்துடைய டீஸர் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  உதயநிதியின் நடிப்பில் தற்போது மாமன்னன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்துடன் தான் நடிப்பதை நிறுத்தி விடுவதாக நிகழ்ச்சி ஒன்றில் உதயநிதி அறிவித்திருந்தார். பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டு, தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

  இந்நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில், உதயநிதி கலகத் தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் டீசர் இன்று வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

  கிங் கோலி... விராட் கோலிக்காக தலைவணங்கிய பாகுபலி இயக்குநர் ராஜமௌலி!

  டீசரை பார்க்கும்போது உதயநிதி படத்திலேயே அதிக ஆக்சன் கொண்டதாக கலகத் தலைவன் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன கதை என்று யூகிக்க முடியாத வகையில் டீசர் கட் செய்யப்பட்டு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

  ' isDesktop="true" id="823973" youtubeid="-uhhxh_6SCk" category="cinema">

  ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் படங்களை எடுப்பதில் இயக்குனர் மகிழ்திருமேனி நிபுணத்துவம் வாய்ந்தவர். அந்த வகையில் அதே ஜானரில் கலக தலைவன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பாக சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படத்தில் இடம் பெற்றிருந்தார்.

  மகிழ்திருமேனி இயக்கத்தில் முன்தினம் பார்த்தேனே, தடையறத் தாக்க, மீகாமன், தடம் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இதில் கடைசியாக அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

  லுக்கே வேற லெவல்.. கவனிக்க வைத்த விக்ரமின் 'தங்கலான்' பட அறிமுகம்.!

  சில மாதங்களுக்கு முன்பாக தளபதி விஜய்யை சந்தித்து மகிழ்திருமேனி கதை சொல்லியதாகவும், இதற்கு விஜய்யும் ஓகே சொன்னதாகவும் தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. இதன் பின்னர்தான் லோகேஷ் கனகராஜுடன் விஜய் மீண்டும் இணைவது குறித்த தகவல் வெளிவந்தது.

  Published by:Musthak
  First published:

  Tags: Udhayanidhi Stalin