இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள விஜய் 67 படத்திற்கான நடிகர் அர்ஜுனின் லுக் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் வெளியாகி உள்ளது. இதை அடுத்து மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. படத்தின் அப்டேட் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. அதற்கு காரணம் கடந்த ஆண்டு லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘விக்ரம்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வருகிறது.
இந்தப் படத்திற்காக History of Violence படத்தின் உரிமையை முறையாக கைப்பற்றி அதில் சில மாற்றங்களை செய்து திரைக்கதை எழுத்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ். மேலும் தன்னுடைய முந்தைய படங்களின் தொடர்பான Lokesh Cinematic Universe கனெக்ஷனையும் தொடர்புப் படுத்தியுள்ளார்.
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதே மேனன் மிஷ்கின், த்ரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
மேலும் இந்தப் படத்தின் பூஜை சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் சமீபத்தில் நடந்தது. மேலும் விக்ரம் படத்துக்கு எப்படி ப்ரோமோ வெளியிடப்பட்டதோ அதேபோல் இந்தப் படத்துக்கும் ப்ரோமோவை படக்குழு உருவாக்கியுள்ளது.
#Thalapathy67 😍💥 pic.twitter.com/5S8iWXrZpf
— @Vijay Fan Latest Media (@Mrmoviecollect1) January 28, 2023
மேலும் இந்தப் படத்தில் பல வில்லன் கதாப்பாத்திரங்கள் உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அந்த வகையில் நடிகர் அர்ஜுனும் விஜய்க்கு வில்லனாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விஜய் 67 படத்தில் அர்ஜுனின் லுக் இதுதான் என்று சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.
Also read... Exclusive: ரசிகர்களை கொண்டாட வைக்கும் பஞ்ச் டயலாக்... விஜய் 67 ப்ரமோவில் என்னென்ன இருக்கின்றன?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Arjun, Actor Vijay