நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா இன்று காலமானார். அவருக்கு வயது 85.
கர்நாடக மாநிலம் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேவம்மாவின் உயிர் இன்று பிரிந்தது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லட்சுமி தேவம்மாவுக்கு 2 மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். மூத்த மகன் கிஷோர் சார்ஜா கன்னட திரையுலகில் இயக்குனராக இருக்கிறார். இரண்டாது மகன்தான் ஆக்சன் கிங் அர்ஜுன்.
‘இந்தியாவையே தமிழ் திரையுலகம் திரும்பி பார்க்கச் செய்துள்ளது’ – தேசிய விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு கமல்ஹாசன் பாராட்டு
மைசூரில் ஆசிரியையாக லட்சுமி தேவம்மா பணியாற்றியுள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைபாடு காரணமாக அவரது உயிர் இன்று பிரிந்துள்ளது.
பெங்களூரில் உள்ள அர்ஜுனின் சொந்த ஊரான மதுகிரி அருகில் உள்ள ஜக்குநல்லியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதே ஊரில் அவர்களது தோட்டத்தில் உள்ள அர்ஜுனின் அப்பாவின் சமாதி அருகே நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
அர்ஜுனின் தந்தையும் கன்னட நடிகருமான சக்தி பிரசாத், தான் அர்ஜுன் திரைத்துறைக்கு வருவதற்கு முக்கிய காரணம். போலீஸ் அதிகாரியாக வேண்டும் என அர்ஜுன் ஆசைப்பட்டிருந்தார்.
பணம் புகழை பார்த்துவிட்டேன்... அதில் சந்தோஷம் நிம்மதி இல்லை - நடிகர் ரஜினிகாந்த்
தென்னிந்திய சினிமாவில் 30 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து ஆக்சன் கிங் என அர்ஜுன் பெயர் பெற்றுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த இரும்புத் திரை படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என பல துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர் அர்ஜுன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.