Home /News /entertainment /

விஜய்யின் தளபதி 67 படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்?

விஜய்யின் தளபதி 67 படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்?

அர்ஜுன் - விஜய்

அர்ஜுன் - விஜய்

தளபதி 67 படத்தில் ஆறு முக்கியமான கதாபாத்திரங்கள் இருக்கிறதாம். அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் விஜய்யுடன் மோதும்படி கதை அமைக்கப்பட்டு வருகிறதாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    விஜய்யின் 67-வது படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

    விஜய்யின் 67-வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கு தற்காலிகமாக 'தளபதி 67' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது, 'தளபதி 67' படக்குழுவில் நடிகர் அர்ஜுன் இணையலாம் என சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. லோகேஷ் கனகராஜ் 'தளபதி 67' படத்தை ஒரு பிரமாண்டமான பான்-இந்தியப் படமாக இயக்க திட்டமிட்டுள்ளார். ஆகையால் முன்னணி நட்சத்திரங்களை இப்படத்தில் நடிக்கை வைக்க விரும்புகிறாராம். 'தளபதி 67' படத்தில் சஞ்சய் தத் மற்றும் பிரித்விராஜ் இருவரும் விஜய்யுடன் இணைந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் 'தளபதி 67' படத்தில் இடம்பெறும் 6 வில்லன்களில் ஒருவராக நடிக்கவிருக்கிறாராம்.

    பிக் பாஸ் பாவனிக்கு தாலி கட்டி குங்குமம் வைத்த அமீர்... வைரலாகும் வீடியோ!

    தளபதி 67 படத்தில் ஆறு முக்கியமான கதாபாத்திரங்கள் இருக்கிறதாம். அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் விஜய்யுடன் மோதும்படி கதை அமைக்கப்பட்டு வருகிறதாம். அதோடு கதாநாயகிகளாக சமந்தாவும், த்ரிஷாவும் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லோகேஷ் கனகராஜ் தற்போது தீவிரமாக படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதோடு படத்தில் கவனம் செலுத்துவதற்காக சமூக வலைதளங்களுக்கு இடைவெளி விட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையில், வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது. படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Arjun, Thalapathy vijay

    அடுத்த செய்தி