ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரூ.100 கோடி கொடுத்தாலும் முடியாது.. இளம் நடிகரால் நொந்துபோன ஆக்ஷன் கிங் அர்ஜூன்!

ரூ.100 கோடி கொடுத்தாலும் முடியாது.. இளம் நடிகரால் நொந்துபோன ஆக்ஷன் கிங் அர்ஜூன்!

அர்ஜூன்

அர்ஜூன்

என் வாழ்நாளில் நான் விஷ்வாக் சென்னிற்கு போன் செய்ததுபோல் போல் வேறு யாருக்கும் அத்தனை முறை போன் செய்தது இல்லை – அர்ஜுன்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆக்ஷன் கிங் அர்ஜுனை தெலுங்கு இளம் நடிகர் நொந்து நோகடித்துள்ளார். இதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்த அர்ஜுன் நடந்த விபரங்களை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

  தென்னிந்திய மொழிகளில் நன்கு அறியப்படும் சீனியர் நடிகராக இருப்பவர் அர்ஜுன். டைரக்சனிலும் ஆர்வம் காட்டும் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து படம் எடுக்க திட்டமிட்டுள்ளார். இதில் ஹீரோவாக தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகர் விஷ்வாக் சென்னை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

  ஆனால், ஆக்சங் கிங்கையே அந்த இளம் நடிகர் நோகடித்துள்ளார். இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பதை அர்ஜுன் செய்தியாளர்களை சந்தித்து கூறியுள்ளார்.

  அர்ஜுன் கூறியதாவது-

  எனது மகளை தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்த இந்தப் படத்தைத் தொடங்கினேன். நான் கதையைச் சொன்னதும் விஷ்வாக் நடிக்க ஒப்புக் கொண்டார். அவர் கேட்ட சம்பளத்தை நாங்களும் தர சம்மதித்தோம்.

  PHOTOS : ‘லவ் டுடே’ நாயகி இவானாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…

  இருப்பினும், ஜெகபதி பாபு போன்ற மற்ற சீனியர் நடிகர்களுடன் படப்பிடிப்பில் விஷ்வாக் கலந்து கொள்ளவில்லை. அவரை பலமுறை தொடர்பு கொண்டும் பதில் வரவில்லை. என் வாழ்நாளில் நான் அவருக்கு போன் செய்ததுபோல் போல் வேறு யாருக்கும் அத்தனை முறை போன் செய்தது இல்லை.

  WATCH – வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ரஞ்சிதமே’ பாடல்…

  இப்படி ஒரு விரோதமான சூழலில் அவரை வைத்து படத்தைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்க வைப்பேன். எனினும் விஷ்வக் சென் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளத்தான் இந்த ப்ரஸ் மீட்டை நடத்தியுள்ளேன். அந்த அளவுக்கு என்னையும் எனது குழுவையும் அவர் மதிக்கவில்லை. 100 கோடி வந்தாலும் இனி அவருடன் பணிபுரிய மாட்டேன்.

  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Arjun