முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கூடுதல் கட்டணம்... தியேட்டர்கள் மீது நடவடிக்கை.. அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!

கூடுதல் கட்டணம்... தியேட்டர்கள் மீது நடவடிக்கை.. அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!

திரையரங்கு

திரையரங்கு

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தேவராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாட்டில் திரையரங்குகளில் பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போதெல்லாம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பல மடங்கு கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுவது வழக்கம்.  எனினும், அந்த படம் திரையரங்குகளில் ஓடி முடிந்த பிறகு அந்த விவகாரமும் அப்படியே சென்றுவிடும். இதனிடையே 2017ம் ஆண்டு சிங்கம் 3 மற்றும் பைரவா போன்ற படங்கள் பண்டிகை தினங்களில் வெளியாகின. திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தேவராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் தலைமையில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகளிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டதுடன், அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

First published:

Tags: Madras High court, Theatre