Vijay Sethupathi: ’விஜய் சேதுபதியுடன் நடிப்பது ஆக்டிங் கிளாஸ் போற மாதிரி' - இந்தி நடிகர் கபீர் சிங்!

கபீர் சிங்

தமிழ்ப் படங்கள், நடிகர்கள் குறித்து பேசுகையில் எக்ஸ்ட்ரா எனர்ஜி இவரது குரலில் வெளிப்படும்.

  • Share this:
    தமிழ் ரசிகர்களை மகிழ்வித்துவந்த விஜய் சேதுபதி மலையாளம், தெலுங்கு, இந்தி என்று எல்லைகளை கடந்து ரசிகர்களை வசீகரிக்கத் தொடங்கியுள்ளார். அவருடன் நடிப்பது நடிப்புப் பள்ளிக்கு போவது போல என்று கூறியுள்ளார் பிரபல வில்லன் நடிகர் கபீர் டுகான் சிங்.

    கபீர் டுகான் சிங் 2015-ல் சினிமாவில் அறிமுகமானார். அவரது வாட்டஞ்சாட்டமான உடம்புக்கு வில்லன் வேடங்கள் தேடி வந்தன. இந்தியில் அறிமுகமான அதே வருடம் அஜித்தின் வேதாளம் படத்தில் நடித்தார். அந்த விசுவாசமா தெரியவில்லை, தமிழ்ப் படங்கள், நடிகர்கள் குறித்து பேசுகையில் எக்ஸ்ட்ரா எனர்ஜி இவரது குரலில் வெளிப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இவரது இரண்டாவது படம், விஜய் சேதுபதியின் றெக்க. பிறகு காஞ்சனா 3, அருவம், ஆக்ஷன் என பல படங்களில் நடித்தார். தற்போது நவாசுதின் சித்திக்குடன் இந்திப் படத்தில் நடிக்கிறார். சீரிஸுகளிலும் வாய்ப்புகள் வருகின்றன. தனது திரைவாழ்க்கை பற்றி குறிப்பிடுகையில், விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக் போன்றவர்களுடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை அதிர்ஷ்டமாக கருதுவதாக கூறியிருப்பவர், அவர்களுடன் நடிப்பது நடிப்புப் பள்ளிக்கு போவது போன்றது என்று புகழ்ந்துள்ளார்.

    இவர் அறிமுகமான முதல் படம் ஜில். இதில் அவர் நாயகன். ஆனால், அடுத்தடுத்தப் படங்கள் வில்லனாக அமைய, நாயகனாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் கிடைத்த வேடத்தில் திறமை காட்டி வருகிறார். அதனால், தெலுங்கிலும் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன.

    சோனு சூட் போன்று வருங்காலத்தில் ஹீரோ வாய்ப்பு உங்களையும் தேடி வரலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: