தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட திரையுலகில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நமீதா. 17 வயதில் மாடல் உலகில் நுழைந்த நமீதா, பின்னர் திரைத்துறையில் புகுந்து கவர்ச்சியின் மூலம் உச்சத்துக்கு சென்றார். 2002ஆம் ஆண்டு 'சொந்தம்' எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை நமீதா. அதன்பிறகு ஜெமினி, ஒக்க ராஜு ஒக்க ராணி, ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி என பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதையடுத்து தமிழில் 2004ஆம் ஆண்டு வெளியான 'எங்கள் அண்ணா' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நமீதா. அதன்பிறகு ஏய், சாணக்யா, ஆணை, இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார். எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார்.
Also Read : சிவா இயக்கும் சூர்யா 42 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்… ரசிகர்கள் மகிழ்ச்சி
நடிகை நமீதாவுக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவையில்லை. மச்சான் என்ற வார்த்தையை தன்னுடைய டிரேட் மார்க்காக ஆக்கியவர். விஜய் டிவியில் டாப் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார் நமீதா. நடிப்பைக் கடந்து அரசியலிலும் பிஸியாக இருக்கிறார். பா.ஜ.கவில் இணைந்த அவர், அந்தக் கட்சிக்காக கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
நவம்பர் 24, 2017 ஆம் ஆண்டு திரைப்பட நடிகரான 'வீரேந்திர சௌத்ரி' என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார் நமீதா. திருமணமான 5 ஆண்டுகளுக்கு பின் தனது பிறந்த நாள் அன்று கர்ப்பமாக இருப்பதை சோசியல் மீடியாவில் பகிர்ந்தார். மேலும் அவரது கர்ப்பகால போட்டோஷூட் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நடிகை நமீதாவிற்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
View this post on Instagram
கிருஷ்ண ஜெயந்தி நாளில் நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த நல்ல சந்தர்ப்பத்தில், எங்கள் மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். உங்கள் ஆசிகளும் அன்பும் அவர்களுக்கு என்றும் இருக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். நமீதாவிற்கு இரட்டை குழந்தை பிறந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Namitha