• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அல்லு அர்ஜுனுடனான மோதலை தவிர்த்த ஆச்சார்யா!

அல்லு அர்ஜுனுடனான மோதலை தவிர்த்த ஆச்சார்யா!

ஆச்சார்யா

ஆச்சார்யா

ஆர்ஆர்ஆர் படத்துடன் எதற்கு மோதல் என்று டிசம்பர் 17-ம் தேதி புஷ்பா படத்துடன் வெளியிட முடிவு செய்தனர்.

  • Share this:
    சிரஞ்சீவி நடித்திருக்கும் ஆச்சார்யா படத்தை டிசம்பர் 17-ம் வெளியிடுவதாக தீர்மானித்திருந்தனர். இப்போது படம் இரண்டு மாதங்கள் தள்ளி வெளியாகிறது.

    தெலுங்கின் முன்னணி நடிகர்களில் அனேகமாக அனைவரின் படங்களும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா, பவன் கல்யாண், ராணாவின் பீம்ல நாயக், அல்லு அர்ஜுனின் புஷ்பா, ராம் சரண், ஜுனியர் என்டிஆரின் ஆர்ஆர்ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியின் ஆச்சார்யா என நீள்கிறது இந்தப் பட்டியல்.

    இதில் புஷ்பா டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகிறது. மகேஷ்பாபு, பவன் கல்யாண், பிரபாஸ் நடித்தப் படங்களை சங்கராந்தியை முன்னிட்டு 2022-ம் ஆண்டு ஜனவரியில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். அந்த நேரத்தில்தான் ராஜமௌலி தனது ஆர்ஆர்ஆர் படம் 2022 ஜனவரி 7-ம் தேதி வெளியாகும் என அறிவித்தார். அத்தோடு மற்ற படங்கள் சங்கராந்தி வெளியீட்டை மறந்தன. பிரபாஸின் ராதே ஷ்யாம் மட்டும் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதில் அதிகம் மாட்டிக் கொண்டது சிரஞ்சீவி, ராம் சரண் நடித்திருக்கும் ஆச்சார்யா. ஆர்ஆர்ஆர் படத்துடன் எதற்கு மோதல் என்று டிசம்பர் 17-ம் தேதி புஷ்பா படத்துடன் வெளியிட முடிவு செய்தனர். ஆனால், புஷ்பாவுக்கு இருக்கும் எதிர்பார்ப்புக்கு முன் ஆச்சார்யா தாக்குப் பிடிக்குமா என சந்தேகம் எழ, எதற்கு வம்பு என்று பட வெளியீட்டை பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர். போட்டிக்கு யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக இப்போதே வெளியீட்டு தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    ஆச்சார்யாவை கொரட்டல சிவா இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் நாயகிகளாக நடித்துள்ளனர். ராம் சரண் படத்தை தயாரித்திருப்பதுடன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். அப்பா சிரஞ்சீவியும், மகன் ராம் சரணும் இணைந்து நடித்திருக்கும் முதல் படம் இது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: