பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள் படமான மை டியர் பூதத்தை பார்த்து, தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான உதயநிதி பாராட்டியுள்ளார். இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
பிரபுதேவா மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் இயக்குநர் என். ராகவனின் குழந்தைகளுக்கான படமாக 'மை டியர் பூதம்' உருவாக்கப்பட்டுள்ளது. அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரித்துள்ள இந்தப் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
'மை டியர் பூதம்' படத்தின் சாட்டிலைட் உரிமை மற்றும் OTT உரிமையை முறையே ஜீ தமிழ் மற்றும் Zee5 அதிக விலைக்கு வாங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
Also read... கோப்ரா திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உதயநிதி
அஸ்வந்த், ஆலியா, சுரேஷ் மேனன், சம்யுக்தா, இமான் அண்ணாச்சி மற்றும் லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில் பிரபுதேவா ஜீனி என்ற பூதமாக நடிக்கிறார். குழந்தை நட்சத்திரங்களான பரம் குகனேஷ், சாத்விக், சக்தி மற்றும் கேசிதா ஆகியோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு யு கே செந்தில் குமார், எடிட்டிங் சான் லோகேஷ், கலை ஏ ஆர் மோகன் மேற்கொள்ள தேவா வசனம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் சிறப்பு காட்சியில் மை டியர் பூதத்தை பார்த்த உதயநிதி படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மை டியர் பூதம் படம் தனக்கு பிடித்திருப்பதாகவும், அனைத்து தரப்பு மக்களும் இந்த படத்தை ரசிப்பார்கள் என்று இயக்குனரிடம் உதயநிதி தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படம் ப்ளாக் பஸ்டராக அமையும் என்றும் உதயநிதி வாழ்த்தியுள்ளார்.
மீண்டும் சீரியலில் நடிக்க போன குக் வித் கோமாளி பிரபலம்! யாருன்னு கெஸ் பண்ணுங்க!
ஜெனி என்ற பூதத்திற்கும் அதாவது பிரபுதேவாவுக்கும் பத்து வயதுக் குழந்தைக்குமான பிணைப்பும் பயணமும்தான் கதையின் முக்கியக் கருவாக இருக்கிறது என்று இயக்குனர் ராகவன் கூறினார்.
மேலும் அவர் கூறுகையி, ‘’இப்படத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சிஜி காட்சிகள் இருக்கும். இந்த காட்சிகளுக்கு அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளோம்.
ஒவ்வொரு திரைப்பட தயாரிப்பாளருக்கும் குழந்தைகளுக்காக ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். படத்தில் நகைச்சுவை மற்றும் எமோஷன் காட்சிகள் சரியான கலவையில் இருக்கும். பிரபுதேவா தனது கதாப்பாத்திரத்திற்காக கடினாக உழைத்துள்ளார். அவரது பாடி லேங்குவேஜை பார்த்தாலே சிரிப்பு ஏற்படும்," என்று அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Prabhu deva