• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அண்ணாத்த 2 நாளில் 100 கோடியை தாண்டியதாக அறிவிப்பு...!

அண்ணாத்த 2 நாளில் 100 கோடியை தாண்டியதாக அறிவிப்பு...!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

அண்ணாத்த படம் முதல் நாளில் உலக அளவில் 70.19 கோடிகளை வசூலித்திருப்பதாக ட்ரேட் அனலிஸ்டுகள் கூறியுள்ளனர். இரண்டாவது நாளில் 42.63 கோடிகள். மொத்தம் 112.82 கோடிகள். இரு தினங்களில் 100 கோடியை உலக அளவில் படம் கடந்திருப்பதாக கூறுகிறார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்திருக்கும் அண்ணாத்த திரைப்படம் இரண்டு தினங்களில் உலக அளவில் 100 கோடியை தாண்டியிருப்பதாக ட்ரேட் அனலிஸ்டுகள் கூறியுள்ளனர்.

தீபாவளிக்கு பட்டாசு, ஸ்வீட்டுடன் சினிமாவும் முக்கிய கொண்டாட்டமாக தமிழர் வாழ்வில் இரண்டற கலந்துவிட்டது. முன்பு ஆறுக்கு மேல் திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியாகும். ஒரே நேரத்தில் அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிடும் முறை வந்த பிறகு தீபாவளிக்கு இரண்டு படங்களுக்கு மேல் வெளியாவதில்லை. நாம் சொல்வது முன்னணி நடிகர்களின் படங்களை. இந்த தீபாவளிக்கு அண்ணாத்த, எனிமி படங்கள் வெளியாகின

இதில் அண்ணாத்த படம் முதல் நாளில் உலக அளவில் 70.19 கோடிகளை வசூலித்திருப்பதாக ட்ரேட் அனலிஸ்டுகள் கூறியுள்ளனர். இரண்டாவது நாளில் 42.63 கோடிகள். மொத்தம் 112.82 கோடிகள். இரு தினங்களில் 100 கோடியை உலக அளவில் படம் கடந்திருப்பதாக கூறுகிறார்கள். தமிழ்நாடு அளவில் முதலிரு தினங்களில் 62.07 கோடிகளை தாண்டியதாகவும் அறிவித்துள்ளனர்.

தமிழகத்திலுள்ள 99 சதவீத திரையரங்குகள் அரசு நிர்ணயித்ததுக்கு மேல் அதிக தொகையை வைத்து டிக்கெட் விற்பனை செய்தன. அந்தத் தொகையை கணக்கிட்டு இப்படியொரு புள்ளி விவரத்தை கொடுத்திருக்கிறார்களா இல்லை, அரசு நிர்ணயித்த கட்டணத்தை வைத்து இரண்டு நாளில் 62.07 கோடி வசூல் என்கிறார்களா தெரியவில்லை.

Also read... மணிரத்னத்தால் மனமுடைந்தேன் - இயக்குனர் பொன்ராம்!

ஆனால், முதலிரு தினங்களில் அண்ணாத்த அபரிதமான வசூலை பெற்றுள்ளது என்பது மட்டும் உண்மை. பத்துக்கு மேற்பட்ட திரையரங்குகள் இரண்டாவது நாள் காட்சியை அதிகப்படுத்தினோம் என்று சமூகவலைத்தளத்தில் அறிவித்திருக்கின்றன. எனில், முதல்நாளைவிட இரண்டாவது நாள் வசூல் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், பல கோடிகள் குறைந்திருக்கிறது. அதன் கணக்கும் தெரியவில்லை.

படத்துக்கு கிடைத்திருக்கும் நெகடிவ் விமர்சனத்துடன் ஒப்பிடுகையில் இது பிளாக் பஸ்டர் கலெக்ஷன், சந்தேகமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: