பாலா இயக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கலாம் என நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
' பெயரைச் சொன்னாலே சும்மா அதிரும்ல ' என்பதற்கேற்ப ஒருகாலத்தில் ஓஹோவென்றிருந்தவர் பாலா . அவரது இயக்கத்தில் படம் வருகிறதென்றால் , புதிய அனுபவத்துக்கு ரசிகர்களும் , திரையுலகமும் தயாராகும் . அவன் இவன் படத்தோடு எல்லாம் முடிந்தது . பாலா படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற டெம்ப்ளேட்டுக்குள் அவர் சிக்கிக் கொண்டதே முதல்காரணம் . தாரை தப்பட்டை அதை உறுதி செய்தது .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடைசியாக நாச்சியார் படத்தை எடுத்தார் . பாலா வின் அதே டெம்ப்ளேட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் , அதில் இருந்த விசாரணைக் காட்சிகள் கதையை பரபரவென நகர்த்தி பார்டரில் படத்தை பாஸாக்கியது . அதையடுத்து அர்ஜுன் ரெட்டியை தமிழில் ரீமேக் செய்தார் . அப்படம் அர்ஜுன் ரெட்டி போலவே இல்லை என முழுப்படத்தையும் நிராகரித்து , வேறொருவரை வைத்து படத்தை மீண்டும் தயாரித்தார்கள் . இப்படியொரு சம்பவம் தமிழ் சினிமாவில் இதுவரை நடந்ததில்லை . பாலா அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது அனைவர் மனதிலும் இருக்கும் கேள்வி . பழைய பாட்ஷாவாக அவர் தன்னை நிரூபித்தாக வேண்டும் .
Also read... ஆர்யா, அருண் விஜய், அதர்வா, கதிர் நடிப்பில் தயாராகும் வெப் தொடர்கள்!
பாலாவின் புதிய படத்தை சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது . ஒருகாலத்தில் சினிமாவில் தத்தளித்துக் கொண்டிருந்த சூர்யாவுக்கு நந்தா மூலம் திசைகாட்டியவர் பாலா . இப்போது அவர் படத்தை தயாரித்து பாலாவுக்கு உதவியிருக்கிறார் .
அதர்வா நடிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷை அணுகியிருப்பதாக தகவல் . தகதகவென இருக்கும் ஹீரோயின்களை தார்பூசி மாற்றுவது பாலாவின் ஹாபிகளில் ஒன்று . கீர்த்தி சுரேஷ் அந்த வன்முறைக்கு தலை கொடுப்பாரா ? இன்னும் சில தினங்களில் பதில் தெரிந்துவிடும் . Published by: Vinothini Aandisamy
First published: August 14, 2021, 12:58 IST
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.