நயன்தாரா, பிரபு தேவா, காஜல் அகர்வால் நடிப்பில் ஒரே நேரத்தில் 8 படங்களை தயாரிக்கும் நிறுவனம்

நயன்தாரா - பிரபுதேவா

நயன்தாரா, பிரபுதேவா, சத்யராஜ், காஜல் அகர்வால், ராய் லட்சுமி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 • Share this:
  நயன்தாரா, காஜல் அகர்வால், சத்யராஜ், ராய் லட்சுமி, ரம்யா கிருஷ்ணன், பிரபுதேவா உள்பட பலர் நடிப்பில் எட்டு திரைப்படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்கிறது அபிஷேக் ஃபிலிம்ஸ்.

  இரண்டாம் அலை கட்டுக்குள் வந்தநிலையில் படத்தயாரிப்பு சுறுசுறுப்படைந்துள்ளது. சசி இயக்கிய சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தை தயாரித்த அபிஷேக் ஃபிலிம்ஸ் எட்டு திரைப்படங்களை தயாரிப்பதாக அறிவித்திருந்தது. பிரபுதேவா, நயன்தாரா, ரெஜினா உள்பட பலர் இந்தப் படங்களில் நடிக்கின்றனர். கொரோனா இரண்டாம் அலையால் இந்தத் தயாரிப்புகள் அறிவிப்போடு நின்றன. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் தயாரிப்புப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொரில்லா பட இயக்குனர் டான் சாண்டி, மஞ்சப்பை, கடம்பன் படங்களின் இயக்குனர் ராகவன், ஜாக்பாட் இயக்குனர் கல்யாண், இயக்குனர் ராஜா சரவணன், சங்கர் சத்யமூர்த்தி ஆகியோர் படங்களை இயக்குகின்றனர். நயன்தாரா, பிரபுதேவா, சத்யராஜ், காஜல் அகர்வால், ராய் லட்சுமி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். நயன்தாரா இரு படங்களில் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

  இந்த எட்டில் பல படங்களின் தயாரிப்புப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. விரைவில் ஒவ்வொரு படம் குறித்தும் தனித்தனியாக அறிவிக்க உள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: