Home /News /entertainment /

அனைத்திந்திய சினிமா என்ற ஒன்று இல்லை: ஏன் இந்தி சினிமா ரீமேக் செய்யப்படுவதில்லையா?- அபிஷேக் பச்சன் பாய்ச்சல்

அனைத்திந்திய சினிமா என்ற ஒன்று இல்லை: ஏன் இந்தி சினிமா ரீமேக் செய்யப்படுவதில்லையா?- அபிஷேக் பச்சன் பாய்ச்சல்

அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன்

பாகுபலி, புஷ்பா, RRR, KGF 2 ஆகிய படங்கள் நாடு முழுதும் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் கொடி நாட்டி வரும் நிலையில் இத்தகைய படங்களை அனைத்திந்திய சினிமாக்கள் அல்லது ‘pan-Indian films’ என்று ஒரு சாரார் கூறுகின்றனர், இந்த பான் இந்தியன் பிலிம்ஸ் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  பாகுபலி, புஷ்பா, RRR, KGF 2 ஆகிய படங்கள் நாடு முழுதும் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் கொடி நாட்டி வரும் நிலையில் இத்தகைய படங்களை அனைத்திந்திய சினிமாக்கள் அல்லது ‘pan-Indian films’ என்று ஒரு சாரார் கூறுகின்றனர், இந்த பான் இந்தியன் பிலிம்ஸ் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

  தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, பெங்காலி, மலையாளம் உள்ளிட்டவை பிராந்திய சினிமா என்று வழங்கப்பட, பலர் - நீண்ட காலமாக, இந்தி மொழி சினிமா பிரதான நீரோட்டமாகக் கருதப்படுகிறது, ஆனால் ஒருசாரார் இந்தித் திரைப்படங்களும் பிராந்தியப் படங்களே என்று கூறுகின்றனர். இது ஒரு பெரிய விவாதம் போய்க் கொண்டிருக்கிறது.

  பாகுபலி அதன் மகத்தான வெற்றியின் மூலம் அனைத்தையும் மாற்றியது என்றால், தாமதமான புஷ்பா தி ரைஸ், RRR மற்றும் KGF 2 ஆகியவை பான் இந்தியன் அல்லது அனைத்திந்திய சினிமா என்ற சொல்லை உறுதிப்படுத்துகிறது. இப்போது பீஸ்ட் / கேஜிஎஃப் 2 திரைப்பட விவாதம் போய்க்கொண்டிருப்பது போல், தமிழ்சினிமா என்றைக்கு முன்னேறும் என்ற சொல்லாடல்கள் சிலகாலமாக இருந்து வருவது போல் ஹிந்தி சினிமா இன்னும் இந்த வகையில் மேம்பாடு அடைய வேண்டும் என்று அங்கும் பேசி வருகின்றனர்.

  ஆனால் நடிகர்கள் பலரும் இந்த வாதங்களை ஏற்பதில்லை. இதில் அபிஷேக் பச்சனும் ஒருவர். “நான் இந்த வகையில் திரைப்படங்களை வகைப்பிரிக்க மாட்டேன், நல்ல படம் ஓடுகிறது, வசூலிக்கிறது, மோசமான படம் ஓடுவதில்லை, இதுதான் விஷயம். துரதிர்ஷ்டவசமாக ‘கங்குபாய் கதியாவதி’, ‘சூர்யவன்ஷி’ போன்ற படங்கள் பேசப்படுவதில்லை, மறக்கப்பட்டு விட்டன.

  கடைசியில் படம் பார்க்க வருபவர்களை கடைசி வரை உட்கார வைத்து அவர்களுக்கு பொழுது போக்க உதவுகிறதா என்பது தான் மேட்டர். இதைத்தான் மக்கள் கேட்கின்றனர். மிகப்பெரிய சூப்பர் ஹீரோ சினிமாக்கள் இதன் மூலம் மீண்டும் உயிர்பெறுகின்றன என்று நான் கூற மாட்டேன். ஒரு வகையான சினிமா மீண்டும் வந்து கொண்டிருக்கிறதா என்று என்னால் கூற முடியவில்லை. ஆனால் நல்ல படம் ஓடும், மோசமான படம் ஓடாது அவ்வளவுதான்.

  இப்போது கூறப்படும் இந்த ஆர் ஆர் ஆர், கேஜிஎஃப் 2, புஷ்பா, பாகுபலி படங்கள் ஓடுவது எனக்கு மகிழ்ச்சியையே அளிக்கிறது. தியேட்டர்களில் ஹவுஸ்புல் ஆகிறது. சினிமா துறைக்கு இது ஒரு அருமையான காலம் என்றே கூற வேண்டும்.

  இதை விடுத்து பான் இந்தியன் பிலிம் அல்லது அனைத்திந்திய சினிமா என்ற சொல்லாட்சி எனக்கு புரியவில்லை, எனக்கு அதில் நம்பிக்கையில்லை. வேறு துறைகளில் இதைப் பயன்படுத்துகிறோமா? இல்லையே. நம் மக்கள் பெரிய அளவில் சினிமா மக்கள். நம் சினிமாவை நேசிக்கின்றனர். அது எந்த மொழி என்பது பற்றி கவலையில்லை என்று நினைக்கின்றனர்.

  அதற்காக பாலிவுட் பின் தங்கி விட்டது என்றால் என்னை அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தி படங்கள் தென்னிந்தியாவில் ரீமேக் செய்யப்படுவதில்லை என்கிறீர்களா? இது ஒரு நியாயமற்ற கேள்வி, ஏனென்றால் நீங்கள் என்ன சொன்னாலும் பதில் தற்காப்புடன் வெளிவருகிறது. நாம் அனைவரும் இந்திய திரையுலகின் அங்கம். நாங்கள் வெவ்வேறு மொழிகளில் வேலை செய்யலாம், ஆனால் நாங்கள் ஒரே துறையில் ஒரு பகுதியாக இருக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒரே பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறோம். எந்தவொரு திரையுலகையும் முத்திரை குத்துவது முற்றிலும் நியாயமானது அல்ல. ஹிந்தி அல்லது எந்த மொழியிலும் படங்கள் எப்போதும் ரீமேக் செய்யப்படுகின்றன. இது ஒரு புதிய நிகழ்வு அல்ல. எல்லா நேரத்திலும் எப்போதும் (உள்ளடக்கத்தின்) பரிமாற்றம் இருந்திருக்கிறது. அதில் தவறில்லை” இவ்வாறு கூறினார் அபிஷேக் பச்சன்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Bahubali, Bollywood, KGF 2

  அடுத்த செய்தி