ஸ்ருஷ்டி டாங்கே வைக்கும் செக் யாருக்கு?... லாஸ்லியா படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

ஸ்ருஷ்டி டாங்கே வைக்கும் செக் யாருக்கு?... லாஸ்லியா படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!
ஸ்ருஷ்டி டாங்கே | லாஸ்லியா | அபிராமி
  • Share this:
லாஸ்லியா நடிக்கும் படத்தில் தற்போது அபிராமியும் இணைந்துள்ளார்.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய லாஸ்லியா கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தற்போது இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

இயக்குநர் ஆல்பர்ட் ராஜா இயக்கத்தில் ஆரி நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் லாஸ்லியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது பிக்பாஸ் அபிராமியும் இணைந்துள்ளார். சந்திரா மீடியா விஷன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.


இந்நிலையில் ஆரியின் 34-வது பிறந்தநாளான இன்று படக்குழு வாழ்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிலும் தன் படத்தைப் பற்றி பிரக்கிங் நியூஸ் சொல்கிறார் லாஸ்லியா. அவரைத் தொடர்ந்து பேசும் ஸ்ருஷ்டி டாங்கே, கடந்த படத்தில் ராஜாவுக்கு செக் வைத்தேன். இந்தப் படத்தில் ஆரிக்கு செக் வைக்கிறேன் என்கிறார்.இதையடுத்து இந்தப் படத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தான் நடிப்பதை பிக்பாஸ் அபிராமி உறுதி செய்துள்ளார். இறுதியில் தயாரிப்பு நிறுவனம் ஆரிக்கு வாழ்த்து சொல்ல வீடியோ முடிகிறது. விரைவில் இந்தப் படத்தில் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஏ.ஆர்.ரஹ்மான் மனு: ஜி.எஸ்.டி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading