Abhi Tailor: கலர்ஸ் தமிழ் அபி டெய்லர் ப்ரோமோ!

Abhi Tailor: கலர்ஸ் தமிழ் அபி டெய்லர் ப்ரோமோ!

அபி டெய்லர்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவிருக்கும் ‘அபி டெய்லர்’ நெடுந்தொடரின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

  • Share this:
    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவிருக்கும் ‘அபி டெய்லர்’ நெடுந்தொடரின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

    பெண்மையை போற்றி கொண்டாடுகிற, சுவாரஸ்யமிக்க, சிறப்பான கதை அம்சம் கொண்ட நெடுந்தொடர்களை ஒளிபரப்பிவருவதற்காக பிரபலமாக அறியப்படும் கலர்ஸ் தமிழ், ’அபி டெய்லர்’ என்ற பெயரில் புதிய நெடுந்தொடரை தொடங்கவிருக்கிறது. தொடக்கத்திலிருந்தே பார்வையாளர்களை நிகழ்ச்சியோடு ஈடுபாட்டுடன் ஒன்றுமாறு கட்டிப்போடப்போகும் ‘அபி டெய்லரின்’ முதல் முன்னோட்ட விளம்பரத்தை ஒளிபரப்பி பார்வையாளர்களது கவனத்தையும், எதிர்பார்ப்பையும் பெரிதும் ஈர்த்திருக்கிறது.



    கலர்ஸ் தமிழ் சேனலில் விரைவில் தொடங்கப்படவிருக்கும் இப்புதிய நெடுந்தொடர் நிகழ்ச்சி பற்றிய ஒரு சுவாரஸ்யமான முன்னோட்டத்தை இந்த புரொமோ விளம்பரம் வழங்குகிறது. ரேஷ்மா முரளிதரன், அபிராமி என்ற கதாபாத்திரத்தில் துடிப்பான தையற்கலை நிபுணராக அறிமுகமாவதுடன் இந்த புரொமோ தொடங்குகிறது. அவரது கடையில் வழங்கப்படும் பல்வேறு சேவைகளின் தொகுப்பை வெறும் 30 நொடிகளில் மிக அழகாக வர்ணிப்பதை இந்த புரொமோ காட்டுகிறது. இதை சொல்லி முடித்து மூச்சு வாங்குவதற்காக நிற்கும்போது, 2021 மே 24-ம் தேதியிலிருந்து தொடங்கி இரவு 10:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் அபி டெய்லர், ஒளிபரப்பாகும் என்பதை இந்த விளம்பரம் எடுத்துரைக்கிறது.

    அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது. தங்களது வசதிப்படி எந்த நேரத்திலும் இதை கண்டு மகிழ பார்வையாளர்கள் VOOT-ஐ டியூன் செய்யலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: