பிற்போக்குத்தனமான அணுகுமுறை - தனுஷ் படம் பற்றி பாலிவுட் நடிகர் கருத்து

தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படத்தில் இருக்கும் குறைகள் குறித்து அந்தப் படத்தில் நடித்திருக்கும் அபய் தியோல் கருத்து பதிவிட்டுள்ளார்.

பிற்போக்குத்தனமான அணுகுமுறை - தனுஷ் படம் பற்றி பாலிவுட் நடிகர் கருத்து
தனுஷ் | அபய் தியோல்
  • Share this:
பாலிவுட்டில் தனுஷ் நடித்த முதல் படம் ‘ராஞ்சனா’. ஆனந்த் எல்.ராய் இயக்கிய இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். தற்போது இந்தப் படம் குறித்து நெட்டிசன் ஒருவர் தனது விமர்சனத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

அதைக் குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருக்கும் நடிகர் அபய் தியோல், “‘ராஞ்சனா’ படம் தொடர்பான சரியான மற்றும் தெளிவான நுண்ணறிவு விமர்சனம். இந்தப் படத்தின் பிற்போக்குத்தனமான உள்ளடக்கத்தின் காரணமாக வரலாறு இந்தப் படத்தை இலகுவாக அணுகாது. பாலிவுட் பல தசாப்தங்களாக இருக்கும் கருத்தைத் தான் இந்தப் படமும்கொண்டுள்ளது. ஒரு பெண் ஒப்புக்கொள்ளும் வரை அவரை ஆண் துரத்தலாம். துரத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

சினிமாவில் மட்டும்தான் அவள் அதனை விருப்பப்பட்டு செய்வாள். ஆனால், நிஜத்தில் நாம் அடிக்கடிப் பார்க்கிறோம் இந்த விவகாரம் பாலியல் வன்முறையை நோக்கிதான் கொண்டு செல்கிறது.


இதனை திரையில் கொண்டாடுவது என்பது பாதிக்கப்பட்டவர்களைக் குற்றம்சாட்டுவதில்தான் சென்று முடியும். அதனை இந்த விமர்சகர் சிறப்பாக செய்துள்ளார். தயவுசெய்து நேரம் ஒதுக்கி அவரின் கருத்துகளை படியுங்கள்.” என்று கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகர் அபய் தியோல் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ‘இது வேதாளம் சொல்லும் கதை’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
First published: August 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading