மகளிர் தினத்தில் மனைவி கொடுத்த சவாலை ஏற்ற ஜெயம்ரவி, அதன் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் சிறந்த ஸ்கிரிப்ட் தேர்வுகளுக்குப் பெயர் பெற்றவர். அதன் மூலம் பல வெற்றிகளை பதிவு செய்திருக்கிறார். கடைசியாக ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான ‘பூமி’ திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியானது.
நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில், ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி ரவியுடனான ஒரு அழகான வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆர்த்தியின் உடற்பயிற்சி சவாலை ஏற்றுக் கொண்ட ரவி அதை, செய்ய முடியாமல் சவாலில் தோற்கிறார்.
இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஜெயம் ரவி, "பெண்கள் எதையும் செய்ய முடியுமா???? உங்கள் அன்புக்குரியவருடன் இதை முயற்சிக்கவும்! நீங்கள் வலுவான பெண்கள். அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த க்யூட் வீடியோ ரசிகர்களிடம் லைக்ஸை குவித்து வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்