ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Sivakarthikeyan: ’அப்பாவே மகனாக விரல் பிடித்திருக்கிறார்’ - சிவகார்த்திகேயன் உருக்கம்!

Sivakarthikeyan: ’அப்பாவே மகனாக விரல் பிடித்திருக்கிறார்’ - சிவகார்த்திகேயன் உருக்கம்!

சிவகார்த்திகேயன் குடும்பம்

சிவகார்த்திகேயன் குடும்பம்

என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர் துளிகளால் நன்றி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

தொலைக்காட்சியிலிருந்து சினிமாவுக்குள் நுழைந்து இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர், அயலான் ஆகியப் படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அதோடு ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார் சிவா.

இவருடைய மனைவி ஆர்த்தி. சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார். தனது எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த ’கனா’ படத்தில் இடம்பெற்ற ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலை மகளுடன் இணைந்து பாடியிருப்பார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ட்விட்டரில் அறிவித்திருக்கும் சிவா, ”18 வருடங்களுக்குப் பிறகு இன்று, என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக… என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர் துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Sivakarthikeyan