Dancing Rose: டேன்ஸிங் ரோஸ் எனது மாணவர் தான் - மனம் திறந்த ஆரி அர்ஜுனன்!

டேன்ஸிங் ரோஸ்

நமக்கு தெரிந்ததை மற்றவருக்கு சொல்லிக் கொடுக்கும்போது கிடைக்கும் சந்தோசம் மிகப் பெரியது.

  • Share this:
    ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் எல் வி பிரசாத் பிலிம் & டிவி அகடமியில் பயிலும் மாணவர்களுக்கு நடிகர் ஆரி அர்ஜுனன் நடிப்புக்கான பயிற்சி வகுப்பை எடுத்தார். இதில் 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இது குறித்து பேசிய ஆரி அர்ஜுனன், “எல் வி பிரசாத் பிலிம் & டிவி அகாடமியில் நடிப்பு பயிற்சி இந்த ஆண்டுதான் தொடங்கியுள்ளது. இந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் தான், நாளைய வெள்ளித்திரையில் ஜொலிக்க போகும் நட்சத்திரங்கள்.

    Aari Arjunan says Sarpatta Parambarai Dancing Rose is his student, Sarpatta Parambarai trailer, Pa Ranjith Sarpatta Parambarai, sarpatta, sarpatta movie, sarpatta parambarai, sarpatta parambarai movie, sarpatta parambarai dancing rose, sarpatta parambarai amazon prime, sarpatta parambarai full movie, sarpatta parambarai full story, sarpatta parambarai history, பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை, சார்பட்டா பரம்பரை திரைப்படம், சார்பட்டா பரம்பரை முழுப்படம், சார்பட்டா பரம்பரை டான்ஸிங் ரோஸ், சார்பட்டா பரம்பரை டேன்ஸிங் ரோஸ்

    நாளைய நட்சத்திரங்களை இப்போது பார்ப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவர்களுக்கு பயிற்சி அளிப்பது எனக்கு உற்சாகமாக இருந்தது. நமக்கு தெரிந்ததை மற்றவருக்கு சொல்லிக் கொடுக்கும்போது கிடைக்கும் சந்தோசம் மிகப் பெரியது. நான் நடிப்பு பயிற்சியாளனாக எனது பயணத்தை இனிது இனிது திரைப்படத்தில் தொடங்கினேன்.

    காலப்போக்கில் நான் நடிகனாக பிஸியாக மாறியதால் அதில் இருந்து பல ஆண்டுகள் விலகி இருந்தேன். இப்போது சிறப்பு நடிப்பு பயிற்சியாளராக இந்த அகாடமியில் வகுப்பு எடுத்தது எனக்கு மறக்க முடியாத ஒரு நினைவாக இருக்கும் என நம்புகிறேன்.

    Aari Arjunan says Sarpatta Parambarai Dancing Rose is his student, Sarpatta Parambarai trailer, Pa Ranjith Sarpatta Parambarai, sarpatta, sarpatta movie, sarpatta parambarai, sarpatta parambarai movie, sarpatta parambarai dancing rose, sarpatta parambarai amazon prime, sarpatta parambarai full movie, sarpatta parambarai full story, sarpatta parambarai history, பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை, சார்பட்டா பரம்பரை திரைப்படம், சார்பட்டா பரம்பரை முழுப்படம், சார்பட்டா பரம்பரை டான்ஸிங் ரோஸ், சார்பட்டா பரம்பரை டேன்ஸிங் ரோஸ்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இப்போது சார்ப்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தவர் எனது மாணவன் தான். அவரை திரையில் காணும்போது நான் அதிகம் சந்தோசப்பட்டேன். அப்படித்தான் இந்தக் அகாடமியிலிருந்து செல்லும் மாணவர்கள் யாரேனும், நாளை வெள்ளி திரையில் ஜொலித்தால் அவர்களின் பெற்றோர்களை விட நான் அதிகம் சந்தோசப்படுவேன்” என்றார்.

    மேலும் தொடர்ந்த அவர், “மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வார்கள். ஒரு குருவா நான் மாணவர்களுக்கு சொல்றது என்னன்னா, நேரத்தை சரியாக பயன்படுத்தனும், நான் சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும் போது நிறைய நேரங்கள் விரயமானது. எனவே அவற்றை சரியாக பயன்படுத்த மாணவர்களை அறிவுறுத்தினேன்.

    இந்த நேரத்தில் நான் இனிது இனிது திரைப்படத்தின் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜுக்கும், இயக்குனர் குகனுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: