ஒரு திருமணத்தில் கலந்துக் கொண்ட சிவகார்த்திகேயனின் குடும்பப் படம் இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்து வருகிறது.
தொலைக்காட்சியில் அறிமுகமான சிவகார்த்திகேயன், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார். தற்போது ’டாக்டர்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர், ‘டான்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். தவிர சிவா நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் உள்ளது.
நடிப்பதோடு மட்டுமல்லாமல், தனது எஸ்.கே.புரொடக்ஷன் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். முதன் முதலில் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய ‘கனா’ என்ற படத்தைத் தயாரித்தார் சிவகார்த்திகேயன். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
Bharathi Kannamma – Raja Rani 2: பாரதி கண்ணம்மாவில் இணைந்த ராஜா ராணி 2!

ஆராதனா சிவகார்த்திகேயன்
’கனா’ படத்தில் இடம்பெற்ற ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடல் மூலம் தனது மகள் ஆராதனாவை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தற்போது சமீபத்தில் தனது குடும்பத்துடன் ஒரு திருமணத்திற்கு சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். உடன் இயக்குநர் நெல்சன் திலீப் குமாரும் தனது குடும்பத்துடன் சென்றிருக்கிறார். அங்கு அவர்கள் எடுத்துக் கொண்ட படங்கள் இன்ஸ்டாகிராமில் கவனம் பெற்றுள்ளன.
குட்டி பெண்ணாக இருந்த ஆராதனா அடையாளமே தெரியாமல், நெடு நெடுவென வளர்ந்திருக்கிறார். அழகான ஹேர் கட்டில் இருக்கும் அவரை ’க்யூட்’ என ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்