ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பழங்குடியின மக்களுக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் இடையிலான போராட்டம் ‘ஆர் யா பார்’

பழங்குடியின மக்களுக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் இடையிலான போராட்டம் ‘ஆர் யா பார்’

ஆர் யா பார்

ஆர் யா பார்

அதிரடி ஆக்‌ஷன் டிராமா வகையில் உருவாகியுள்ள இந்த தொடரில் ஆதித்யா ராவல், ஆஷிஷ் வித்யார்த்தி, பத்ரலேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பழங்குடியின மக்களை நவீன உலகிற்கு மாற்ற முயற்சிக்கும் ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையில், பணம் - அரசியல் - அதிகாரம் ஆகியவற்றின் போராட்ட பின்னணியில் 'ஆர் யா பார்' என்ற இணைய தொடரை உருவாக்கியுள்ளனர். 

உயிர், பணம், அதிகாரம் ஆகிய மூன்றுக்கும் இடையிலான போராட்டத்தை மையமாகக் கொண்டு இந்த இணைய தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது.  அதில் தன்னுடைய பழங்குடியின மக்களை நவீன உலகத்திற்கு மாற்ற நினைக்கும் ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை இதில் படமாகியுள்ளனர்.

க்ளென் பரெட்டோ, அங்குஷ் மொஹ்லா மற்றும் நீல் குஹா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள தொடர் ‘ஆர் யா பார்’. இந்த இணைய தொடர் இந்தியில் உருவாகி இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடுகின்றனர்.  இந்த இணைய தொடரை ஹாட்ஸ்டார் நிறுவனம் தங்களுடைய ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியிடுகிறது.

Also read... கருப்பு நிற உடையில் கலக்கும் நடிகை அனன்யா பாண்டே!

பழங்குடியினர் சந்திக்கும் பிரச்சனை, அவர்களை அரசியலாகும் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நேரடியாக சாடியுள்ளனர் என கூறப்படுகிறது. அதிரடி ஆக்‌ஷன் டிராமா வகையில் உருவாகியுள்ள இந்த தொடரில் ஆதித்யா ராவல், ஆஷிஷ் வித்யார்த்தி, பத்ரலேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'ஆர் யா பார்'  தொடரை வரும் 30ம் தேதி வெளியிடுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment