விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்கும் அமீர்கான்!

இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

news18
Updated: August 4, 2019, 11:06 AM IST
விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்கும் அமீர்கான்!
விஜய் சேதுபதி - அமீர் கான்
news18
Updated: August 4, 2019, 11:06 AM IST
தமிழில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

புஷ்கர் -காயத்ரி இயக்கத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும் , விஜய்சேதுபதி கேங்க்ஸ்டராகவும் நடித்திருந்த படம் விக்ரம் வேதா. இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்திருந்தார். விறுவிறுப்பான திரைக்கதையாலும் , நேர்த்தியான நடிப்பாலும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தை மற்ற மொழிகளில் இயக்க அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஹிந்தி பதிப்பில் அமீர்கான் மற்றும் சைஃப் அலிகான் நடிக்க உள்ளனர். தமிழில் விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி ஹிந்தியிலும் இயக்க உள்ளனர்.


மாதவன் நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும் விஜய்சேதுபதி நடித்த தாதா கதாபாத்திரத்தில் அமீர்கானும் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. ஹிந்தியிலும் விக்ரம் வேதா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது

Also watch

First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...