கொரோனா இரண்டாம் அலைக்கு நிதி திரட்டும் நோக்கில் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துடன், செஸ் விளையாடவிருக்கிறார் பாலிவுட் நடிகர் அமீர் கான்.
தற்போது கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரபலங்களும், தொண்டு நிறுவனங்களும் நிதி திரட்ட முன்வந்துள்ளன. அதில் கிடைக்கும் வருவாயை, உதவி தேவைப்படும் மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் செஸ் விளையாட்டைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு உதவிடும் வகையில் 'செக்மேட் COVID' என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறது தனியார் அமைப்பான செஸ்.காம். ஜூன் 13-ம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமீர்கான், ஐந்து முறை உலக சாம்பியனும், இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடவிருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுதொடர்பாக, "நீங்கள் அனைவரும் காத்திருக்கும் தருணம்! சூப்பர் ஸ்டார் அமீர்கான் ஒரு சதுரங்க விளையாட்டு காதலன். அவர் முன்னாள் உலக சாம்பியனான
விஸ்வநாதன் ஆனந்துடன் ஒரு போட்டியில் விளையாடுவார்" செஸ்.காம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
நடிகர்
அமீர்கான் சதுரங்க விளையாட்டை அதிகம் விரும்பும் நபர். Aamir Khan to play chess against Viswanathan Anand to raise fund for covid 19அவருடன் படங்களில் பணிபுரிந்த துணை நடிகர்கள் பலரும் பட ஷூட்டிங்கின் இடைவேளையில் அவர்
செஸ் விளையாடியதை பல முறை மீடியாக்களில் தெரியப்படுத்தியுள்ளனர். தவிர ஏற்கனவே விஸ்வநாத ஆனந்துடன், அமீர்கான் செஸ் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.