முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மகளாக நடித்தவரை திருமணம் செய்துக் கொள்ளும் அமீர்கான்?

மகளாக நடித்தவரை திருமணம் செய்துக் கொள்ளும் அமீர்கான்?

அமீர் கான் - பாத்திமா

அமீர் கான் - பாத்திமா

நடிகை பாத்திமா சனா ஷேக்கை அமீர் கான் மூன்றாவதாக திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

  • Last Updated :

நடிகர் அமீர்கானின் மூன்றாவது திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன.

பாலிவுட்டில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களில் வலம் வருபவர் நடிகர் அமீர்கான். அமீர் தனது முதல் மனைவியான ரீனா தத்தாவை 2002-ல் விவாகரத்து செய்தார். அமீர்கான் லகான் திரைப்படத்தில் நடித்த போது அந்தப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவுடன் பழக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து இருவரும் 2005-ல் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அமீர்கான் - கிரண் ராவ் இருவரும் கடந்த ஜூலை மாதம் தங்களது விவாகரத்தை அறிவித்தனர். அப்போது ’இந்த விவாகரத்து ஒரு முடிவு அல்ல. ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக நீங்கள் காண்பீர்கள்’ என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நடிகை பாத்திமா சனா ஷேக்கை அமீர் கான் மூன்றாவதாக திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அமீர் கான் நடித்த தங்கல் படத்தில் அவரின் மகளாக நடித்தவர் தான் பாத்திமா.

இதற்கிடையே இது குறித்துப் பேசிய பாத்திமா சனா ஷேக், இது வெறும் வதந்தி தான் இது பற்றி என்னிடம் கேள்வி கேட்காமல் சிலர் தங்கள் விருப்பம்போல் எழுதுகிறார்கள். இதில் உண்மையில்லை என்று கூறியிருக்கிறார்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Aamir Khan