Home /News /entertainment /

Laal Singh Chaddha Review : பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் ஆமிர் கானின் லால் சிங் சத்தா திரைப்படம்…

Laal Singh Chaddha Review : பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் ஆமிர் கானின் லால் சிங் சத்தா திரைப்படம்…

லால் சிங் சத்தா படத்தின் போஸ்டர்

லால் சிங் சத்தா படத்தின் போஸ்டர்

லால் சிங் சத்தா திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ஆமிர்கான் ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிர புரொமோஷனில் ஈடுபட்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஆமிர்கான் நடிப்பில் வெளிவந்துள்ள லால் சிங் சத்தா திரைப்படம் பாசிடிவான விமர்சனங்களைப் பெற்று வருவதால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    6 ஆஸ்கர் விருதுகளை அள்ளி ஃபாரெஸ்ட் கம்ப் படத்தை பாலிவுட் நடிகர் ஆமிர்கான் லால் சிங் சத்தா என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்திருக்கிறார்.

    தமிழில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டை பொருத்தளவில் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் மட்டுமே லால் சிங் சத்தா திரைப்படம் திரையிடப்பட்டது.

    இந்நிலையில் படத்தை பார்த்தவர்கள் பாசிடிவான விமர்சனங்களை ட்விட்டரில் அளித்து வருகின்றனர்.











    லால் சிங் சத்தா திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ஆமிர்கான் ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிர புரொமோஷனில் ஈடுபட்டார்.

    தமிழ் சினிமா பிரபலங்களுக்காக லால் சிங் சத்தா திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. இதனைப் பார்த்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், சிவகார்த்திகேயன், பார்த்திபன் உள்ளிட்டோர் படத்தை பாராட்டியிருந்தனர்.

    உலகம் முழுவதும் திரையிடப்பட்ட இடங்களில் பாசிடிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Aamir Khan

    அடுத்த செய்தி