Home /News /entertainment /

Aamir Khan: தயவுசெய்து எனது படங்களை புறக்கணிக்காதீர்கள் - அமீர்கான் உருக்கம்!

Aamir Khan: தயவுசெய்து எனது படங்களை புறக்கணிக்காதீர்கள் - அமீர்கான் உருக்கம்!

அமீர்கான்

அமீர்கான்

நான் இந்தியாவை விரும்பாத ஒருவர் என்று பலர் நம்புவதை நினைத்து, நான் வருத்தப்படுகிறேன்.

    தனது படத்தை புறக்கணிக்க வேண்டாம் என பாலிவுட் நடிகர் அமீர்கான் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். 

    பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது சமீபத்திய ஊடக உரையாடலில் தன்னைச் சுற்றியுள்ள சமூக வலைதள ட்ரோலிங் மற்றும் அவரது வரவிருக்கும் திரைப்படமான லால் சிங் சத்தா குறித்து உரையாடினார். ட்விட்டரில் 'பாய்காட் பாலிவுட்' மற்றும் 'பாய்காட் லால் சிங் சத்தா' போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டானது குறித்து கேட்டபோது, ​​அதைப் பற்றி 'வருத்தமாக' உணர்வதாக தெரிவித்தார் அமீர்கான். அவர் தனது நாட்டை நேசிப்பதில்லை என்று ட்ரோல்கள் கூறுகின்றன, ஆனால் அது முற்றிலும் 'உண்மையற்றது' என்றும் அவர் விளக்கினார்.

    பாய்காட் பாலிவுட் போன்ற டிரெண்டிங் ஹேஷ்டேக்குகள் அவரை பாதிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமீர்கான், “பாய்காட் பாலிவுட், பாய்காட் அமீர்கான், பாய்காட் லால் சிங் சத்தா போன்ற ஹேஷ்டேக்குகள் மிகுந்த வருத்தமளிக்கின்றன. இதை மனதிற்குள் சொல்லிக் கொண்டிருக்கும் பலர், நான் இந்தியாவை விரும்பாத ஒருவர் என்று நம்புவதை நினைத்து, நான் வருத்தப்படுகிறேன். அவர்கள் மனதிற்குள் அதை நம்புகிறார்கள். ஆனால் அது முற்றிலும் பொய்யானது. நான் நாட்டை மிகவும் நேசிக்கிறேன். சிலர் அப்படி உணர்ந்தால் அது துரதிர்ஷ்டவசமானது. அவர்கள் நினைப்பது உண்மையல்ல, என்பதை அனைவருக்கும் தெளிவுப்படுத்தி, நான் இந்தியாவை நேசிப்பவன் என தெரியப்படுத்தவிரும்புகிறேன். எனவே தயவுசெய்து எனது படங்களைப் புறக்கணிக்காதீர்கள். தயவு செய்து என் படங்களைப் பாருங்கள்” என்றார்.



    முதல்வரை நேர்ல பாத்துட்டேன்... செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்வில் பாடியது குறித்து கிடாக்குழி மாரியம்மாள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    1994-ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படமான ஃபாரெஸ்ட் கம்பின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான லால் சிங் சத்தா ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகிறது. இதில் அமீர் கானுடன் இணைந்து, கரீனா கபூர் கான், மோனா சிங் மற்றும் நாக சைதன்யா ஆகியோரும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Aamir Khan, Bollywood

    அடுத்த செய்தி