ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் டாம் ஹாங்ஸ் நடிப்பில் 1994-ம் ஆண்டு வெளியான ஃபார்ஸ்ட் கம்ப் இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்தி வருகிறார் அமீர்கான். அட்வைத் சந்தன் இயக்கி வரும் இந்தப் படத்துக்கு லால் சிங் சட்டா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மார்ச் 14-ம் தேதி 56வது பிறந்தநாள் கொண்டாடிய அமீர்கானுக்கு பிரபலங்கள் பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது இன்ஸ்டராகிராம் பக்கம் மூலம் அவர் நன்றி தெரிவித்தார். அதில், “எனது பிறந்தநாளில் நீங்கள் காட்டிய அன்புக்கு நன்றி. என் மனது நிறைந்துவிட்டது. இதுதான் என்னுடைய கடைசி சமூகவலைதள பதிவு. நான் சமூகவலைதளங்கள் பரபரப்பாக இருப்பதாகக் கருதி அதிலிருந்து விலகியிருக்க முடிவு செய்திருக்கிறேன்.
இதற்கு முன்பு இருந்தது போலவே தொடர்பில் இருப்போம். அமீர்கான் புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ சேனலைத் தொடங்கியுள்ளது. எனவே என் எதிர்கால அப்டேட்கள், பட விவரங்கள் அனைத்தும் இனி அங்கு பதிவிடப்படும். இதுதான் அந்த அதிகாரப்பூர்வ பக்கம் @AKPPL_official என்று கூறியுள்ளார்.