ஆமிர் கானின் மகள் ஐரா கான் தனது நீண்டநாள் காதலர் நூபுர் ஷிகாரேவை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டதை சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோவில் நூபுர், ஐராவை நோக்கி நடந்து சென்று உதட்டில் முத்தமிடுவதை காணலாம். பின்னர் அவர் முழங்காலில் நின்று, மோதிரத்தை ஐராவுக்கு அணிவித்து ப்ரொபோஸ் செய்தார். அதற்கு ஐராவும் 'எஸ்' என்று கூறினார்.
இந்த பதிவுக்கு திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் பின்தொடர்பாளர்கள் வாழ்த்துச் செய்திகளால் அன்பை பொழிந்து வருகிறார்கள். நூபுர் ஷிகாரே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிலும் இந்த புரொபோசல் நிகழ்வின் பல படங்களைப் பகிர்ந்துள்ளார். சில வருடங்களாக காதலில் இருக்கும் ஐராவும், நுபூரும் சமூக வலைதளங்களில் தங்களின் காதலை அடிக்கடி வெளிப்படுத்தி வருகின்றனர்.
View this post on Instagram
பிரபல பாலிவுட் நடிகையிடம் வாய்ப்பை இழந்த சமந்தா?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடந்த சில மாதங்களாக ஐரா மற்றும் நூபுரின் திருமணம் குறித்த வதந்திகள் பரவி வந்தாலும், இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தற்போது தங்களது நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ள இந்த இளம் ஜோடிகள் விரைவில் திருமணம் செய்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aamir Khan