நடிகர் அமீர்கான் - கிரண் ராவ் இருவரும் தங்களது 15 வருட திருமண பந்தத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.
பாலிவுட்டில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களில் வலம் வருபவர் நடிகர் அமீர்கான். அமீர் தனது முதல்மனைவியான ரீனா தத்தாவை 2002-ல் விவாகரத்து செய்தார். அமீர்கான் லகான் திரைப்படத்தில் நடித்த போது அந்தப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் 2005-ல் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமீர்கான் - கிரண் ராவ் இருவரும் தங்களது விவாகரத்தை அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இவர்களது மகன் ஆசாத் இருவருடனும் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “இந்த 15 ஆண்டுகால அழகான வாழ்க்கையில் நாங்கள் எங்கள் அனுபவங்களையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளோம். எங்களது உறவானது நம்பிக்கை, அன்பு,மரியாதையில் வளர்ந்தது. நாங்கள் எங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாத்தை தொடங்க விரும்புகிறோம். இனி கணவன் - மனைவியாக அல்ல. ஆனால் ஒரு இணை பெற்றோராக ஒரு குடும்பமாக இருப்போம். சில காலங்களுக்கு முன்பாகவே நாங்கள் பிரிவது குறித்து திட்டமிட்டோம். தற்போது அந்த பிரிவை முறைப்படுத்துவதை வசதியாக உணர்கிறோம்.
நாங்கள் எங்கள் மகன் ஆசாத்துக்கு நல்ல பெற்றோராக இருப்போம். திரைப்படங்கள் மற்றும் பானி அறக்கட்டளை மற்றும் நாங்கள் விரும்பும் திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றுவோம். தொடர்ச்சியாக எங்களுக்கு அதரவளித்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த விவாகரத்து ஒரு முடிவு அல்ல. ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக நீங்கள் காண்பீர்கள்.உங்கள் அன்பிற்கு நன்றி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.