• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சுதந்திரம் குறித்து சர்ச்சைக் கருத்து - கங்கனா ரனாவத் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார்

சுதந்திரம் குறித்து சர்ச்சைக் கருத்து - கங்கனா ரனாவத் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார்

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

சுதந்திரம் குறித்த கங்கனா ரனாவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை காவல்துறையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருந்துவருபவர் கங்கனா ரனாவத். அவருடைய சிறப்பான நடிப்பின் மூலம் பிரபலமடைந்தார். பெண் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இதுவரையில் நான்கு முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார். மேலும், கடந்த ஆண்டு அவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

    அவருடைய நடிப்பு சாதனைகளைக் கடந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி எப்போதும் பரபரப்பான நபராகவே அறியப்படுகிறது. மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசைக் கடுமையாக விமர்சித்தார். அதன்காரணமாக, அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தநிலையில் அவருக்கு இசட்ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால், எப்போதும் பா.ஜ.க மற்றும் மோடியின் மிகுந்த ஆதரவாளராகவே இருந்துவருகிறார்.

    அவருடைய சர்ச்சைக் கருத்துகளின் காரணமாக ட்விட்டர் அவருடைய கணக்கை நீக்கியது. இந்தநிலையில், ஆங்கில ஊடக நிகழ்ச்சியில் பேசிய கங்கனா ரனாவத், ‘1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது சுதந்திரம் அல்ல பிச்சை. 2014-ம் ஆண்டுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது. காங்கிரஸ் ஆங்கிலேயர் ஆட்சியின் நீட்சி’ என்று பேசியிருந்தார். அவருடைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருடைய கருத்துக்கு கண்டனங்கள் எழுந்துவருகின்றன.


    இதற்கு பா.ஜ.க எம்.பி வருண் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரித்தி சர்மா மேனன் கங்கனா ரனாவத்துக்கு எதிராக மும்பை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், ‘கங்கனாவின் அவதூறு மற்றும் தேசத்துரோக கருத்துக்கு அவர் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும். அவர் மீது 504, 505, 124ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: