முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஈரம் படத்தின் இயக்குனருடன் மீண்டும் இணையும் ஆதி

ஈரம் படத்தின் இயக்குனருடன் மீண்டும் இணையும் ஆதி

சப்தம் திரைப்படம்

சப்தம் திரைப்படம்

Aadhi pinisetty | சப்தம் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த படமும் திகில் கதையை மையமாக வைத்து உருவாகிறது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஈரம் திரைப்படத்திற்குப் பிறகு சப்தம் என்ற திரைப்படத்திற்காக ஆதி மற்றும் இயக்குனர் அறிவழகன் இணைந்துள்ளனர்.

ஆதி நடிப்பில் அறிவழகன் இயக்குனராக அறிமுகமான படம் ஈரம்.  2009 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.  தமிழ் சினிமாவின் வித்தியாசமான திகில் படம் என்ற பட்டியலிலும் ஈரம் இணைந்தது. இதற்கு பிறகு அறிவழகன் வல்லினம், குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது ஆதி மற்றும் அறிவழகன் மீண்டும் இணைந்துள்ளனர்.

சப்தம் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த படமும் திகில் கதையை மையமாக வைத்து உருவாகிறது.  தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் சப்தம் திரைப்படத்தை எடுக்க உள்ளனர். 7ஜி சிவா தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார்.

மாற்றுத்திறனாளி ரசிகருடன் நடிகர் விஜய்... இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ!

இதற்கான வேலைகள் தற்போது அறிவிப்புடன் தொடங்கியுள்ளன.  அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டு இருக்கிறார்.

First published:

Tags: Kollywood, Tamil Cinema