Home /News /entertainment /

அம்மன் பாடல்களின் நாயகி எல்.ஆர். ஈஸ்வரியும்... திரைப்பயணமும்..

அம்மன் பாடல்களின் நாயகி எல்.ஆர். ஈஸ்வரியும்... திரைப்பயணமும்..

எல்.ஆர்.ஈஸ்வரி

எல்.ஆர்.ஈஸ்வரி

சினிமா பாடல்கள் மட்டுமின்றி பக்திப் பாடல்கள் உலகிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார் எல்.ஆர்.ஈஸ்வரி.

  • News18
  • Last Updated :
    ஆடி மாதம் என்றாலே மக்கள் நினைவில் வரும் இரண்டு விசயங்கள் ஒன்று அம்மன் கோவிலில் ஊற்றும் கூழ்... மற்றொன்று எங்கும் ஒலிக்கும் எல்.ஆர்.ஈஸ்வரியின் பக்தி பாடல்கள்... தற்போது எல்.ஆர்.ஈஸ்வரியின் திரைப்பயணங்கள் பற்றிய ஒரு தொகுப்பு.

    தேனினும் இனிமையான குரலால் பி.சுசிலாவும் மறுபக்கம் தென்றலென தவழ்ந்த குரலால் எஸ்.ஜானகியும் இசை ரசிகர்களை கட்டி போட்டிருந்த காலம் அது. இவ்விரு கான மலைகளுக்கிடையே ஒர் புது வெள்ளம் ஒன்று கந்தர்வ குயிலாய் பாட தொடங்கியது. அவர்தான் எல்.ஆர்.ஈஸ்வரி.. இவர் பாடிய பாடலில் மதி மயங்கிய தமிழ் சினிமா பாச மலர் தூவி வரவேற்றது. ஆம்.. ’பாச மலர்’ திரைப்படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ’வாராயோ தோழி வாராயோ’ பாடல் எல்.ஆர்.ஈஸ்வரியை வாராயோ தோழி என சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது தமிழ் சினிமா.

    “ஆடவரரெல்லாம் ஆட வரலாம்…”,“மலரென்ற முகம் ஒன்று..” என்று எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பல பாடல்கள் அன்னாளில் இளம் ரசிகர்களை ஆடவைத்த அதே பொழுதில் அவரின் "அம்மம்மா கேளடி தோழி'' பாடலில் தன் தூக்கத்தை தொலைத்தனர். ’கறுப்பு பணம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் காட்சிகள் கருப்பு வெள்ளையானாலும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் ஆயிரம் வண்ணங்களை ரசிகர்களிடத்தில் நிறைத்திருந்தது.

    ஒருவர் ரகசியமாய் கதை சொல்லலாம்… ரகசியமாய் பாட முடியுமா..? முடியும் என்பதை நிரூபித்து காட்டினார் எல்.ஆர்.ஈஸ்வரி. "வெள்ளிவிழா' திரைப்படத்தில் கதாநாயகி ஜெயந்திக்காக பாடும் "காதோடுதான் நான் பேசுவேன்'’ பாடலில் எண்ணற்ற ரசிகர்களை தன் ரகசிய சினேகிதன் ஆக்கினார் எல்.ஆர்.ஈஸ்வரி.

    ஹைப்பிச் வாய்சின் ஸ்பெஷலிஸ்ட் எல்.ஆர்.ஈஸ்வரி என சொல்லும் அளவு தொடக்கத்திலோ, இடையிலோ, நிறைவிலோ ஹம்மிங் கலந்த அவரது பாடல்கள் ரசிகர்களை வேறு உலகத்தில் கொண்டு சேர்த்தது. ‘குடியிருந்த கோவில்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ”துள்ளுவதோ இளமை’ பாடல் ஒரு விதம் என்றால், ‘பவளக்கொடியிலே முத்துக்கள்' பாடலிலும் "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” பாடலிலும், வேறொரு விதமாக அமைந்து ஹம்மிங்கை உருக்கி வார்த்திருப்பார் எல்.ஆர்.ஈஸ்வரி.

    Also read... இன்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த சிவாஜியின் ஆன்மிக படம்

    சினிமா பாடல்கள் மட்டுமின்றி பக்திப் பாடல்கள் உலகிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார் எல்.ஆர்.ஈஸ்வரி. ஆடி மாதம் ஆனாலே ஒவ்வொரு அம்மன் கோயிலிலும் குழாய் ஸ்பீக்கரில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய “கற்பூர நாயகியே கனகவல்லி” பாடலும்… ’செல்லாத்தா செல்ல மாரியாத்தா’ பாடலும் இப்போதும் ஒலிப்பதை கேட்கலாம். ஆம்… ஆடி மாதம் என்ரொன்று உண்டென்றால் நிச்சயம் அங்கே ஒலித்து கொண்டிருக்கும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment

    அடுத்த செய்தி