நல்லது செய்பவர்களை மக்கள் ஆதரிப்பார்கள் - நடிகர் ஆதி

நடிகர் ஆதி

தற்போது மக்கள் விழிப்புடன் உள்ளதாகவும் நல்லது செய்பவர்களை அவர்கள் ஆதரிப்பார்கள் என்றும் நடிகர் ஆதி தெரிவித்துள்ளார்.

  • Share this:
‘மிருகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆதி. தொடர்ச்சியாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஆதி அடுத்ததாக ‘சிவுடு’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார். சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்தை ஆதர்ஷ சித்ராலயா தயாரிப்பு நிறுவனம் சார்பில் சத்யா பிரபாஸ் தயாரிக்கிறார். ஜெய் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.இந்தப் படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடிக்க நடிகை நிக்கி கல்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரசிகர் மன்றத்தினர் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட நடிகர் ஆதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நற்பணி மன்றத்தினரை சந்திக்கும் நேரங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குவது, சமூக பணிகளில் ஈடுபடுவது வழக்கம். அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை” என்றார்.

கமல்ஹாசன் அழைத்தால் அரசியலுக்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகர் ஆதி, “நான் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது மக்கள் விழிப்புடன் உள்ளனர் நல்லது செய்பவர்களை மக்கள் ஆதரிப்பார்கள்” என்றார்.

மேலும் பேசிய அவர், அரசியலுக்கு சினிமாத்துறையினர் வரக்கூடாது என்பதில்லை. சேவை செய்ய எந்த துறையினரும் அரசியலுக்கு வரலாம் என்றார்.

செய்தியாளர் : செல்வா

ஒசூர்
Published by:Sheik Hanifah
First published: