‘மிருகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆதி. தொடர்ச்சியாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஆதி தற்போது பார்ட்னர், க்ளாப், குட் லக் ஷகி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அடுத்ததாக ‘சிவுடு’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார். சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்தை ஆதர்ஷ சித்ராலயா தயாரிப்பு நிறுவனம் சார்பில் சத்யா பிரபாஸ் தயாரிக்கிறார். ஜெய் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.இந்தப் படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடிக்க நடிகை நிக்கி கல்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி யாகவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. ‘மரகத நாணயம்’ படத்தில் நடித்த போதே ஆதி - நிக்கி கல்ராணிக்கு இடையே காதல் மலர்ந்ததாக தகவல் வெளியானது.
ஆதியின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான ரவிராஜாவின் பிறந்தநாள் 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி கொரோனா லாக்டவுன் காலத்தில் வீட்டில் கொண்டாடப்பட்டது. குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்ட இந்நிகழ்வில் நடிகை நிக்கி கல்ராணியும் கலந்து கொண்டதால் ஆதி குடும்பத்தினருக்கு நெருக்கமானவராக அவர் பார்க்கப்பட்டார். அதைத்தொடர்ந்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து இருவரும் வாய் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.