நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி திருமணத்திற்கு பிறகு தமிழகத்திலுள்ள பல்வேறு ஊர்களில் இருக்கும் ஆதரவற்ற இல்லங்களுக்கு உணவு வழங்கியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் மிருகம் திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகர் ஆதியும், டார்லிங் திரைப்படம் மூலமாக அறிமுகமான நிக்கி கல்ராணியும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் யாகவராயினும் நாகாக்க என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர். கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள், சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
அந்த திருமண விழாவிற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் நெருங்கிய நண்பர்களையும் மட்டுமே அழைத்திருந்தனர்.
Also read... SK20 பட தலைப்பு நாளை வெளியாகிறது...!
இந்த நிலையில் ஆதி நிக்கி கல்ராணி நட்சத்திர ஜோடி தங்களது திருமணத்தை முன்னிட்டு நாகர்கோவில், திருநெல்வேலி, திண்டுகல், கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்ற இல்லங்களுக்கு உணவு வழங்கியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor aadhi, Nikki Galrani