Home /News /entertainment /

ஜல்லிக்கட்டை மையப்படுத்திய வெற்றிமாறனின் வெப் தொடர்...!

ஜல்லிக்கட்டை மையப்படுத்திய வெற்றிமாறனின் வெப் தொடர்...!

ஜல்லிக்கட்டை மையப்படுத்திய வெப் தொடர்

ஜல்லிக்கட்டை மையப்படுத்திய வெப் தொடர்

Vetrimaran: வெற்றிமாறன் படம் இயக்குவதுடன் படங்களை தயாரித்தும் வருகிறார். காக்கா முட்டை தொடங்கி பல படங்களை தயாரித்தவர் இப்போது வெப் தொடர் ஒன்றையும் தயாரிக்கிறார்.

  • News18
  • Last Updated :
வெற்றிமாறன் தயாரிப்பில் ஜல்லிக்ட்டை மையப்படுத்திய வெப் தொடர் ஒன்று தயாராகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

வெற்றிமாறன் படம் இயக்குவதுடன் படங்களை தயாரித்தும் வருகிறார். காக்கா முட்டை தொடங்கி பல படங்களை தயாரித்தவர் இப்போது வெப் தொடர் ஒன்றையும் தயாரிக்கிறார். இந்த வெப் தொடர் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.

இந்த வெப் தொடரை இயக்குகிறவர் ராஜ்குமார். வெற்றிமாறன் தயாரிப்பில் தினேஷ் நடிப்பில் அண்ணனுக்கு ஜே என்ற படம் வெளியானதல்லவா... அந்தப் படத்தை இயக்கியவர் இவர்தான். வெற்றிமாறனின் முன்னாள் அசிஸ்டெண்ட்.

தற்போது பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நடந்துவரும் நிலையில், நிஜ ஜல்லிக்ட்டு போட்டியில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இதில் பிரதான வேடத்தில் ஷீலா நடிக்கிறார். இவர் டூலெட், திரௌபதி உள்பட பல படங்களில் நடித்தவர். இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Also read... வாரிசுகள் நடித்த ஹிருதயம் படத்தின் மாஸ் ஓபனிங்...!

ஜல்லிக்ட்டு போட்டியின் போது எடுக்கப்பட்ட காட்சிகளிலும் இவர் இடம்பெற்றுள்ளார். விருமாண்டியில் வரும் அன்னலட்சுமியை போன்ற வேடமாம் இதில் இவருக்கு. மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான நம்பர் ஒன் திரைப்படத்தை இயக்கிய சந்தோஷ் விஸ்வநாத்தின் புதிய பான் - இந்தியா திரைப்படத்திலும் ஷீலா பிரதான வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த வெப் தொடரை டிஸ்னி + ஹாட் ஸ்டாருக்காக வெற்றிமாறன் தயாரிக்கிறார். எப்போது தொடர் வெளியாகும் என்பதை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Director vetrimaran, Jallikattu

அடுத்த செய்தி