ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்த ரசிகர்கள்... விஜயின் செயலால் கொண்டாட்டம்!

வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்த ரசிகர்கள்... விஜயின் செயலால் கொண்டாட்டம்!

 விஜய்

விஜய்

வாரிசு திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு எடுக்கப்பட்ட சில வீடியோஸ் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் குவிந்ததால் அவர்களை பார்த்து விஜய் கையசைத்துவிட்டு செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முன்னதாக நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த 'பீஸ்ட்' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. இதற்கு அடுத்தபடியாக வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

Also read... வெண்ணிலவே வெண்ணிலவே... விண்ணைதாண்டி வருவாயா? - நடிகை கஜோலின் நியூ ஸ்டில்ஸ்

இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு, விஜய் சமீபத்தில் விடுமுறைக்கு சென்றிருந்தார். அப்போது கடந்த வாரம் அமெரிக்காவில் ரசிகர் ஒருவருடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், படத்துக்காக சில பேட்ச்வொர்க் செய்யக் கிளம்பினார் இயக்குநர். கர்நாடகாவின் பெல்லாரியில் மீண்டும் குழுவுடன் இணைந்தார் வம்ஷி. அதோடு ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்படவிருக்கிறது. இந்தப் படப்பிடிப்பில் விஜய் கலந்துக் கொண்டார்.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு எடுக்கப்பட்ட சில வீடியோஸ் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. அப்படி விஜயை சந்திக்க ரசிகர்கள் பலரும் அவரின் கேரவான் அருகில் குவிந்தனர். அப்போது விஜய் ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay