முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / படத்த பார்த்துட்டு போன் பண்ணவே இல்லை.. கேப்டன் குறித்து ஆர்யாவை கிண்டலடித்த உதயநிதி

படத்த பார்த்துட்டு போன் பண்ணவே இல்லை.. கேப்டன் குறித்து ஆர்யாவை கிண்டலடித்த உதயநிதி

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

கலகத் தலைவன் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ள நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு உதயநிதி ஸ்டாலின் படம் குறித்து பேசி வருகிறார். அப்போது, சமீபத்தில் ஆர்யாவின் நடிப்பில் வெளியான கேப்டன் படம் குறித்து உதயநிதி பேசினார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் படம் குறித்து உதயநிதி கிண்டலாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உதயநிதியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் கலகத் தலைவன். இந்தப் படத்தை தடம், தடையறத் தாக்க, மீகாமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். உதயநிதிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கவனம் பெற்ற நடிகர் ஆரவ் கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

க்ரைம் த்ரில்லர் ஆக்சன் ஜானரில் கலகத் தலைவன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லர் அட்டகாசமாக உள்ளதென சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆரல் கரோலி இசையமைத்துள்ள இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ள நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு உதயநிதி ஸ்டாலின் படம் குறித்து பேசி வருகிறார். அப்போது, சமீபத்தில் ஆர்யாவின் நடிப்பில் வெளியான கேப்டன் படம் குறித்து உதயநிதி பேசினார்.

Also read... தமிழின் முதல் இரண்டாம் பாகம் திரைப்படம் எது தெரியுமா?

அதில் ஆர்யா போன் செய்து கேப்டன் படம் பார்த்துட்டு போன் பண்ணுங்கனு சொன்னாரு... நான் படம் முடிச்சுட்டு போனே பன்னல... அவரும் போன் பன்னல. கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? ப்ரடேட்டரே திரும்பி எடுத்துருக்கலாமேனு கேட்டேன் என்றும் உதயநிதி கேப்டன் படத்தை கிண்டலடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Arya, Udhayanidhi Stalin