முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'துண்டான நாசர் தலை பேசும்'.. புல்லரிச்ச சீன் அது.. 'தேவர் மகன்' க்ளைமேக்ஸ் ரகசியம் பகிர்ந்த கமல்!

'துண்டான நாசர் தலை பேசும்'.. புல்லரிச்ச சீன் அது.. 'தேவர் மகன்' க்ளைமேக்ஸ் ரகசியம் பகிர்ந்த கமல்!

கமல்

கமல்

கமல் நடித்த பல படங்கள் இன்றும் பேசப்படுகிறது. அப்படி ஒரு படம்தான் தேவர் மகன். இப்படத்திற்கான கதை, திரைக்கதை எழுதியவர் கமல்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

துண்டான நாசரின் தலை பேசும், புல்லரிச்ச சீன் அது என்று தேவர் மகன் க்ளைமேக்ஸ் ரகசியம் குறித்து கமல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

‘விக்ரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது அவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் பிஸியாக நடித்துவருகிறார். இதை அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே கமல், மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க இருந்தார். இதை கமல்ஹாசனே அறிவித்தும் இருந்தார். அந்தப் படம் ‘தேவர் மகன் 2’ எனவும் கூறப்பட்டது. அந்தப் படம் தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த தகவலை இயக்குநர் மகேஷ்நாராயணன் சமீபத்தில் மறுத்திருந்தார்.

கமல் நடித்த பல படங்கள் இன்றும் பேசப்படுகிறது. அப்படி ஒரு படம்தான் தேவர் மகன். இப்படத்திற்கான கதை, திரைக்கதை எழுதியவர் கமல். இயக்கியவர் பரதன். ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல், கவுதமி, ரேவதி, வடிவேலு, நாசர் ஆகியோர் நடித்த இத்திரைப்படம் 1992-ம் ஆண்டு வெளியானது.

Also read... 15 வருடங்களை நிறைவு செய்யும் அஜித்தின் பில்லா

தென்மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தில்  நடக்கும் பங்காளி சண்டையை மையமாக வைத்து  எடுக்கப்பட்ட தேவர் மகன் திரைப்படம், வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றியை பெற்ற திரைப்படம். கமலுக்கு தந்தையாக சிவாஜி நடிக்க சிவாஜியின் அண்ணன் மகனாக நாசர் இந்தப் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் கமல் தனியார் நிறுவனத்திற்கு பேட்டியளித்திருந்தார். அதில், தேவர் மகன் படத்திலிருந்து சென்சார் செய்யப்பட்ட க்ளைமேக்ஸ் குறித்து பேசியுள்ளார். தேவர் மகன் படத்தில் அந்த க்ளைமேக்ஸ் காட்சி மிகச்சிறந்ததாக இருந்தது. ஒரு டெக்னிசியனாக அந்த காட்சியை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த காட்சியில் கமலுக்கும் நாசருக்கும் சண்டை நடைபெறும் போது நாசரின் தலை வெட்டப்பட்டு துண்டாக உருண்டு ஓடும். அப்போது நான் ஓடி பின்னால் சென்று அழுவேன். இப்போது உனக்கு சந்தோஷமா உன்ன மாதிரியே என்னையும் கிரிமினலாக்கிட்ட என்று அழுதுகொண்டிருக்கும் போது நாசரின் தலை மட்டும் வாயில் எச்சி வடிய எதோ கூறுவது போல் இருக்கும். அந்த தலையில் இருந்து ரத்தம் வடிய மெதுவாக அந்த கண்கள் மூடும் காட்சி புல்லரித்துவிட்டது என்று கமல் கூறினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment, Kamal Haasan