• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு மாலை அணிவித்த ப்ளூ சட்டை மாறன்!

தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு மாலை அணிவித்த ப்ளூ சட்டை மாறன்!

ப்ளூ சட்டை மாறன்

ப்ளூ சட்டை மாறன்

 ஆன்டி இன்டியனை திரையரங்கில் வெளியிடக் கூடாது என்பதில் பல தயாரிப்பாளர்கள் முனைப்புடன் இருக்கிறார்கள். இவர்கள் மாறனால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்கள். வெளிப்படையாக படத்தை திரையிடக் கூடாது என்று சொல்ல முடியாது என்பதால் திரைமறைவில் அதற்கான காய்கள் நகர்த்தப்படுகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு ப்ளூ சட்டை மாறன் என்கிற இளமாறன் மாலை அணிவித்து மலர் தூவிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

யார் படமாக இருந்தாலும் கழுவி ஊற்றுவது ப்ளூ சட்டை மாறனின் ஸ்டைல். அந்த  வீடியோக்களின் கீழே, 'மவனே 'தில்' இருந்தா ஒரு படம் எடுத்துப்பாரு' என்றரீதியில் நாலு டஜன் கமெண்ட்களாவது எழுதப்படும். திரையுலகில் உள்ள பெரும்பாலானவர்கள் அவர் மீது கொலை வெறியில் இருக்கிறார்கள். அதேபோல் அவரால் விமர்சிக்கப்பட்ட முன்னணி நடிகர்களின் ரசிகர்கள்

இப்படியொரு பகைக் கூட்டத்தை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு படத்தை எடுக்க துணிச்சல் தேவை. ப்ளூ சட்டை மாறன் எடுத்திருக்கும் அந்த ரிஸ்க்தான், ஆன்டி இன்டியன் திரைப்படம். மாறன் எழுதி இசையமைத்து இயக்கியிருப்பதுடன் நடித்தும் இருக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மாறனின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர், பாட்ஷா என்ற பெயருடன் இடம்பெற்றிருந்தது

Also read... ரசிகர்களுடன் டாக்டரை பார்த்து ரசித்த சிவகார்த்திகேயன், அனிருத் - புகைப்படங்கள்!

ஆன்டி இன்டியன் சென்சார் ஆகி வந்ததும் மாறனின் பகைக்கூட்டம் அவரை விமர்சிக்க ஆரம்பித்தது. நேற்று நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், தன்னைப் பற்றி எழுதப்பட்ட கமெண்ட்களை வாசித்தார் மாறன். 'ஒரேயொரு காட்சி சுமாரா இருந்தாலும் மவனே கழுவி ஊற்றுவோம்டா' என்றரீதியில் ஒவ்வொரு கமெண்டும் அறச்சீற்றத்துடன் இருந்தன. 'நீ என்ன என்னை கலாய்ப்பது, நானே கலாய்ச்சுக்கிறேன்' என்பது போல், விழா முடிந்ததும், தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு மாறனே மாலையிட்டு மலர் தூவினார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.



 ஆன்டி இன்டியனை திரையரங்கில் வெளியிடக் கூடாது என்பதில் பல தயாரிப்பாளர்கள் முனைப்புடன் இருக்கிறார்கள். இவர்கள் மாறனால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்கள். வெளிப்படையாக படத்தை திரையிடக் கூடாது என்று சொல்ல முடியாது என்பதால் திரைமறைவில் அதற்கான காய்கள் நகர்த்தப்படுகின்றன. ரசிகர்கள் மாறன் அப்படி என்னத்தான் எடுத்து வைத்திருக்கிறார் என அறியவும், விமர்சிக்கவும் காத்திருப்பதால் திரையரங்குகளும் படத்தை வெளியிட ஆவலாக உள்ளன.  தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்டர்டெயின்மெண்ட் காத்திருக்கு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: